Baakiyalakshmi Today episode |17.01.2023 Review | Vijay TV
Baakiyalakshmi Gopi stuns family
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி மனசாட்சி இல்லாமல் இந்த வீட்டை வித்து விடுவேன் எனக் கூற ராமமூர்த்தி தாத்தா மிகவும் கோபப்படுகிறார். பின்னர், அனைவரும் தடுத்து நிறுத்தியும் எழில் தான் இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூற, ராமமூர்த்தியின் கணக்கான 30 லட்சத்தை விடுத்து தனக்கு எழுவது லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என கோபி கூறுகிறார். இத்தனையும் நடக்கும் பொழுது பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் அளிக்கிறது. ஈஸ்வரி இன்னும் தன் மகனுக்கு சாதகமாகவே பேசுகிறார்.
ராதிகாவிடம் கோபி அங்கு நடந்தவற்றை கூற ராமமூர்த்தி கோபப்படுகிறார். அவர் பாக்யா இப்பொழுது நினைத்தாலும் ஜீவனாம்சம் கேட்கலாம் எனக் கூற, கோபி அதெல்லாம் தர முடியாது என கூறுகிறார். ராதிகாவும் கோபிக்கு சாதகமாக பேசுகிறார்.
இங்கு வீட்டில் ஈஸ்வரி எழிலிடம் கோபப்பட்டு எழில் உருப்படாதவர் எனக் கூறி பாக்யாவின் செல்லம் தான் அனைத்திற்கும் காரணம் எனக்கூறி செல்கிறார். செழியன் தன் வீட்டிற்கு எதுவும் செய்யாமல் ஜெனியிடம் கோபப்படுகிறார்.