கடுப்பான பாக்யா! Baakiyalakshmi today episode 17th June 2024 Review
Baakiyalakshmi Gopi warns Baakiya (PC Hotstar).jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எப்பொழுதும் போல அதிகமாகவே தான் பேசுகிறார். ஆனால் பாக்கியா திருப்பிக் கொடுக்காமல் இன்னும் அதிர்ச்சியிலேயே இருக்கிறார். பழனிச்சாமியோடு தனக்கு காதல் எல்லாம் இல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனால் கோபியின் பேச்சு அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. நீ எல்லாம் தாயா என கோபி கேட்டு விட்டு விமல் இனியாவை பற்றியும் பேசுகிறார் பாக்யா ஒரு கட்டத்திற்கு மேல் வெளியே போங்கள் என கத்தி விடுகிறார்.
இந்தக் கோபத்தோடு பாக்யா நேராக பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரது அக்கா பழனிச்சாமிக்கும் பாக்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருக்கும் ஆசையை பற்றி கூறுகிறார். அதிர்ச்சி அடைந்து திரும்பி வர எத்தனிக்கிறார் பாக்யா. ஒருவழியாக மனதை இடம் ஆக்கி பழனிக்கும் தனக்கும் இருப்பது சுத்தமான நட்பு மட்டுமே எனக் கூறிவிட்டு என்றும் எனக்கு திருமணம் செய்ய ஆசை இல்லை என கூறிவிடுகிறார். பழனியின் அக்கா கோபப்பட்டாலும், அவரது அம்மா அதை புரிந்து கொள்கிறார்.
மீண்டும் ஹோட்டலுக்கு வந்த பாக்யா சிறிது நேரம் யோசனைக்குப் பிறகு பழனிச்சாமியை அழைத்து இதை பேசிவிடலாம் என முடிவெடுக்கிறார். ஆனால் பழனியே பாக்கியாவை சூப்பர் மார்க்கெட் இருக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து செல்கிறார். பாக்யா மனம் நிறைய யோசனையோடு பயணம் செய்கிறார்.