Baakiyalakshmi Today episode | 18.01.2023 Review | Vijay TV
Baakiyalakshmi Varshinis new plan
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியிடம் செழியன் தன் அம்மாவிற்கும் தம்பிக்கும் உதவ முடியாது எனக் கூறுகிறார். அந்த வீட்டை வாங்க பணம் இருந்தும் அதை வாங்கினால் பின்னர் அதில் சொத்து பிரச்சனை வரும் என சிந்திக்க வேறு செய்கிறார்.
கவலையாக அமர்ந்திருக்கும் எழில் பாக்யாவிடம் இந்த வீட்டை எப்படியாவது வாங்கி ஆக வேண்டும் எனக் கூறுகிறார். பாக்கியாவோ இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வாடகை வீட்டுக்கு சென்று விடலாம் என கூறுகிறார். இந்த வீட்டில் மகிழ்ச்சியான நினைவுகளே இல்லை என பாக்யா கூற, எழிலோ கோபி மீண்டும் ஜெயிக்க கூடாது எனக் கூறுகிறார். எப்பாடுபட்டாவது இந்த வீட்டை மீட்டே தீருவேன் என அவர் சூளுரைக்கிறார்.
எழில் தன் நண்பரிடம் பேசிவிட்டு ஒரு தயாரிப்பாளரிடம் தனது கதைகளை விற்று விடலாம் என முடிவு செய்து கிளம்புகிறார். இதற்கு நடுவில், ஈஸ்வரி வர்ஷினிடம் அனைத்து உண்மைகளையும் கூற வர்ஷினி எழிலின் பணத் தேவையை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார். கடைசியாக தயாரிப்பாளரிடம் கதையை விற்பதாக எழில் கூற, அவர் கேள்விகள் கேட்பதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.