Baakiyalakshmi Today Episode | 20.01.2023 Review | Vijay Tv
Baakiyalakshki Easwari angry
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் ஜெனி இடம் ஆத்திரப்படுவதை பார்த்து பாக்கியா அவர் எந்த உதவியும் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார். ஈஸ்வரியும் செழியனுக்கு முட்டுக் கொடுக்கிறார். பின்னர் புது தயாரிப்பாளர் எழிலுக்கு அதிர்ச்சி தந்து பழைய தயாரிப்பாளரான வர்ஷினியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கினால் மட்டுமே கதையை வாங்க முடியும் என கூறுகிறார்.
எழிலும் வர்ஷினியின் அப்பாவை சந்திக்க போக அவர் வேண்டுமென அவரைக் காக்க வைத்து விட்டு, பின்னர் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் தேவைப்படும் பணம் அனைத்தையும் சம்பளமாகவே தருவதாக கூறுகிறார். எழில் அமிர்தாவை காதலிப்பதாக கூறி இதை ஏற்க மறுத்து விட்டு கோபமாக வெளியேறுகிறார்.
வீட்டில் ஈஸ்வரிடம் எழில் இதைப் பற்றி கூறாமல் மறைக்க அவர் எனக்கு எல்லாம் தெரியும் என வர்ஷினில் அனைத்தையும் கூறிவிட்டதாக கூறுகிறார். வாக்குவாதம் வலுக்கிறது. அமிர்தாவை தான் காதலிக்கிறேன், அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என எழில் கூற, ஈஸ்வரி நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது எனக் கூறுகிறார்.