பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக எடுத்ததுமே புதிதாக ஒருவரை எழில் என காட்டுகிறார்கள். இந்த நாள் வரை எழிலாக நடித்த VJ விஷால் அவர்கள் விலகிக் கொள்ள புதிதாக நவீன் என்பவர் இன்று முதல் எழில் கதாபாத்திரத்தில் தோன்ற போகிறார். அவர் தன்னுடைய திரைக்கதையை ஒரு தயாரிப்பாளருக்கு சொல்ல கிளம்ப ராமமூர்த்தியும் பாக்யாவும் அவரை ஆசீர்வதித்து அனுப்புகிறார்கள். பின்னர் பாக்யா ஹோட்டலுக்கு கிளம்பும் முன் ஜெனி இடம் ராமமூர்த்தியை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பின்னர் சில வேலைகளை கூறுகிறார் ஆனால் பாக்யாவே ஜெனி வேலைகளை மறந்து விடுவார் என சொல்லி இருக்கும் வேலைகளை ஒரு தாளில் எழுதி அதை அமிர்தாவிடம் கொடுக்க சொல்கிறார். இது ஜெனியை வருத்தமடைய செய்கிறது.
கோபியின் வீட்டில் ஈஸ்வரி புது இடத்தில் சிறிது தாமதமாக எழுகிறார். ராதிகா அவரது தாய் மற்றும் மயு அறைக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈஸ்வரி காபி காபி என கத்துகிறார். ஆனால் கமலா ராதிகாவை உடனடியாக சென்று கவனிக்க வேண்டாம் என கூறிவிட்டு சிறிது நேரம் கழித்து செல்கிறார். எங்களது பெயரை சொல்லி அழைக்காமல் காப்பி என்று அழைத்தால் யாரும் வரமாட்டார்கள் எனவும் கூறுகிறார்.
ஜெனி தனக்கு பொறுப்பில்லையா என புலம்ப செழியனோ அமிர்தா தான் வீட்டு வேலை செய்வதை கரெக்டாக செய்வார் நீ அதை எடுத்து தலையில் போட்டுக் கொள்ளாதே என ஆறுதல் கூறுகிறார். ஜெனி இன்னும் சரியாகவில்லை. இதற்கு இடையில் ஹோட்டலில் பாக்யாவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இவரது ஹோட்டலுக்கு பக்கத்து கடையில் பார் ஒன்றை அமைக்கப் போவதாக அதன் உரிமையாளர் கூற, அதை எண்ணி பாக்யாவும் அவரது ஹோட்டலில் வேலை செய்பவர்களும் பயப்படுகிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.