பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி அதிகரித்துக் கொண்டே போகிறது. கமலா காபி எடுத்து வந்து கொடுக்க அதை கோபி வாங்கி கொள்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை வாங்க மறுத்து விடுகிறார். ஏன் என்று கோபி கேட்க ஈஸ்வரி அதற்கு ஒரு மணி நேரமாக நான் காபி வேண்டும் என கேட்டேன் என வேண்டும் என்று கண்டு கொள்ளவில்லை என வத்தி வைக்கிறார். அதற்கு கமலாவோ பில்டர் காபி போட நேரமாகிவிட்டது என கூறுகிறார். அந்த சமயத்தில் ராதிகாவும் அங்கு வர ராதிகாவின் கர்ப்பத்தை பற்றி மீண்டும் பேச்சு வருகிறது. இந்த குழந்தையை கலைப்பதே நல்லது என ஈஸ்வரி கூற என் மகளின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி கூற நீங்கள் யார் என கமலா கேட்கிறார். அந்த குழந்தை என்னுடைய மகனுடையதும் தான் அதனால் எனக்கு உரிமை இருக்கிறது என இவர் கூற சண்டை பெரிதாகிறது. கோபிக்கு இப்பொழுது தலைவலி ஆரம்பித்துவிட்டது.
இன்னொரு பக்கம் பாக்யா எழிலுக்காக காத்திருக்கிறார். புது எழில் தயாரிப்பாளர் இடம் கதை கூறிவிட்டு வந்து தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்க தான் காத்திருந்தேன் என பாக்யா கூறுகிறார். பின்னர் இருவரும் ஒன்றாக வீடு திரும்புகிறார்கள்.
இதற்கிடையில் கோபியை தனியாக அழைத்து சென்று ராதிகாவும் கமலாவும் ஈஸ்வரி செய்யும் காரியங்களை பற்றி நிறைய கூறுகிறார்கள். விரைவில் ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் எனவும் கூறுகிறார்கள். கோபி வெளியே வந்து பார்த்தால் அங்கு ஈஸ்வரி இதையெல்லாம் கேட்டு விட்டதை உணருகிறார். ஈஸ்வரி மயங்கி விடுகிறார். அவரை சரி செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்தால் அவர் வர தயாராக இல்லை. என்னவென்று விசாரிக்கும் பொழுது அவர் எனக்கு யாரும் காலை உணவை அளிக்கவில்லை. சர்க்கரை அளவு குறைந்துவிட்டது எனக் கூறுகிறார். அதற்கு கோபி கோவப்படுகிறார். ஆனால் இதை நடிப்பு என கமலா நினைக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.