பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி? Baakiyalakshmi today episode 23.09.2021 update
Baakiyalakshmi Easwari angry
பாக்கியலட்சுமி சீரியல் இன்று எழிலும் அமிர்தாவும் அவர்களது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பாக்கியாவும் செல்வியும் வருகிறார்கள். பாக்கியா அந்தப் பெரிய சமையல் ஒப்பந்தத்தை எடுத்ததைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார். எழிலும் அமிர்தாவும் அவருக்கு உறு துணையாக நிற்போம் என கூறுகிறார்கள்.
பின்னர், ஜெனிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறார் இது செழியனுக்கு கோபத்தை தருகிறது. செழியனுக்கு இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்பதை ஈஸ்வரிடம் ஜெனி கூறுகிறார்.
பாக்யா ராதிகா வீட்டிற்கும் சென்று அங்கும் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி கூறிவிட்டு வருகிறார். வீட்டிற்கு வந்தவுடன் ஈஸ்வரி ஜெனியின் விவகாரத்தை எடுத்து சண்டை போடுகிறார். பாக்கியா ஜெனியிடம் அவர் அலுவலகத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கூறி விடுமாறு கூறுகிறார்.