பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரியின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மயங்கி விழுந்தது போல் நடித்து கோபியை பதற வைக்கிறார் ஈஸ்வரி பின்னர் தனக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனவும் கமலா மற்றும் ராதிகா தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் எனவும் கூறுகிறார். அதற்கு கோபி கோபப்பட்டு ராதிகாவையும் கமலாவையும் எச்சரிக்கிறார். ராதிகாவிடம் தன் தாயை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதே சமயத்தில் ஜெனி ராமமூர்த்திக்கு அமிர்தாவே உணவு கொண்டு போய் கொடுப்பதை பார்த்து வருத்தம் அடைகிறார். ஏனெனில் அவரும் தாத்தாவிற்கு தனியாக உணவும் எடுத்து வந்திருக்கிறார். இனி இதை நீங்களே செய்யுங்கள் ஜெனி என அமிர்தா கூறியும் ஜெனி புரிந்து கொள்ளாமல் கோபமாக கிளம்பி விடுகிறார்.
இங்கு ராதிகா வீட்டில் ராதிகாவிற்கு பழங்களை ஈஸ்வரி எடுத்து அதை அவரே உண்ணுகிறார். இதை பார்த்து கோபமடைந்து கமலா கேள்வி கேட்க உங்களுக்கு சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என ராதிகாவும் அந்த பழங்களை பறித்து வைத்துக் கொள்கிறார். அதற்கு கோபியிடம் தொலைபேசியில் அழைத்து என்னை பலம் கூட சாப்பிட விட மாட்டார்கள் என புலம்புகிறார் ஈஸ்வரி. அதனால் கோபப்பட்ட கோபி என் தாய் எனக்கு முக்கியம் என ராதிகாவை தொலைபேசியில் அழைத்து கூறுகிறார். ராதிகா கோவமாக உள்ளே சென்று விடுகிறார். எனக்கு எதற்கு பழம் எனக்கே சர்க்கரை இருக்கிறது என்று தன் நாடகத்தை மீண்டும் தொடர்கிறார் ஈஸ்வரி.
கடைசியாக எழில் வீட்டிற்கு வந்து அனைவரிடமும் மகிழ்ச்சியான செய்தியை கூறி அவர் படம் தயாரிக்கப் போவதாக கூறுகிறார். அதை ஈஸ்வரியிடம் தொலைபேசியில் கூற ஈஸ்வரி மகிழ்ந்தாலும் குழந்தை தான் முக்கியம் எனக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்து விடுகிறார். கமலா எரிச்சல் அடைகிறார் ஈஸ்வரி. அதற்கு நான் டைரக்டரின் பாட்டி என கூறுகிறார்.