குழப்பத்தில் பாக்யா! Baakiyalakshmi today episode 24.09.2021 update
Baakiyalakshmi Easwari Gopi
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனி மற்றும் செழியனுக்கு பாக்கியா அறிவுரை கூறுகிறார். குழந்தையை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுமாறும் ஒருவாரம் விடுப்பு எடுக்குமாறு கூறுகிறார். பின்னர், அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும்போது பாக்கியா அவர்களிடம் தனது புது காண்ட்ராக்ட் பற்றியும் அவர் சமைக்கப் போவதாக முடிவெடுத்தது பற்றியும் கூறுகிறார். குடும்பமே அதிர்ச்சி அடைகிறது.
கோபி, ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் அனைவரும் அவரை வசை பாடுகிறார்கள். இது வேலைக்காகாது என கூறுகிறார்கள். பின்னர் உடைந்துபோன பாக்கியா செல்வி மற்றும் எழிலிடம் பேசுகிறார். எழில் கொடுத்த தைரியத்தால் இந்த சமையலை செய்து முடித்துவிடலாம் என முடிவு செய்கிறார்.
கடைசியாக அவர் அவரது அண்டை வீட்டாரிடம் உதவி கேட்பதோடும் அவர்கள் அதிர்ச்சி அடைவதோடும் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.