பாக்யாவின் முயற்சி – Baakiyalakshmi today episode 25.09.2021 review
Baakiyalakshmi Amirtha Selvi
பாக்கியலட்சுமி சீரியல் இன்று பூங்காவில் வைத்து நான்கு நண்பர்களிடம் பாக்யா உதவி கேட்கிறார். சமையல் செய்வதில் விருப்பமில்லை எனவும் அவர்கள் சமையல்காரி இல்லை எனவும் கூறி மூன்று பேர் விலகிவிட ஒருவர் மட்டுமே சம்மதிக்கிறார்.
இந்த விஷயத்தை பாக்கியா எழிலிடம் கூறுகிறார். எழில் எப்பொழுதும் போல் தன் அம்மாவிற்கு உத்வேகம் கொடுக்கிறார். பின்னர் அமிர்தா எழிலுக்கு போனில் அழைத்து அவர்களுக்கு உதவுவதாக கூறுகிறார். இதைக் கேட்டு பாக்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
பின்னர் அக்கம்பக்கம் உள்ள பெண்கள் அனைவரையும் வீட்டில் அமர வைத்து, தங்களது திட்டத்தை பாக்யாவும் அமிர்தாவும் தெரிவிக்கிறார்கள். ஈஸ்வரி எப்பொழுதும்போல் எரிச்சலடைகிறார். பின்னர் இந்த கூட்டத்தில் இருந்தும் ஒரே ஒரு ஆள் மட்டும் சம்மதிக்க, பாக்யா இதற்கே மகிழ்ச்சி அடைகிறார்.
கடைசியாக தொழிலதிபர் ராஜசேகர் வீட்டிற்கு செல்ல அங்கு அவர் முன் பணம் வேண்டுமா எனக் கேட்கிறார்