கோபியின் தில்லாலங்கடி வேலை – Baakiyalakshmi today episode 25.10.2021 review
Baakiyalakshmi Gopi Radhika with Mayu
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் ஜெனி பிரச்சனையை விட ராதிகாவுடன் அவரது புது காரை வாங்குவதுதான் கோபிக்கு பெரியதாக தெரிகிறது. அவர் பாக்கியாவிடம் காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்கிறார். பின்னர் ராதிகாவுடன் கார் ஷோரூமிற்கு சென்று புது காரை வாங்குகிறார்கள். குடும்பமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அங்கு வேலை செய்பவர் கோபியை மயூவிடம் அப்பா என கூறுவதை கேட்டு மயூ குழப்பமாகிறார்.
செழியனை சாப்பிட சொல்லி பாக்யா அழைக்க, செழியனோ பாக்யாவிடம் எரிந்து விழுகிறார். ராதிகா கோவிலுக்கு செல்லவேண்டும் எனக் கூற, கோபி, மாலை அவர்களை அழைத்து செல்வதாக வாக்குறுதி அளிக்கிறார். மயூ தன் குழப்பத்தை விவரிக்க, ராதிகா காரணங்கள் கூறுகிறார். ஆனால், கோபி மயூ தன்னை தந்தை என அழைத்தால் மகிழ்ச்சிதான் என கூறுகிறார்.
பின்னர், ராமமூர்த்தியுடன் பாக்கியா கோயிலுக்கு கிளம்புகிறார். கோபி ராதிகா மற்றும் மயூ அதே சமயத்தில் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.