Baakiyalakshmi today episode 27.11.2021 review
Baakiyalakshmi Gopi plans
பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று மயூ கோபி வந்தால் மட்டுமே பட்டாசு வெடிப்பேன் என காத்திருக்கிறார். இது ராதிகாவுக்கும் அவர் அம்மாவுக்கும் இடையே ஒரு சண்டையை கிளப்புகிறது. வீட்டில் கோபி எப்படியாவது ராதிகா வீட்டிற்கு செல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா கையில் அடிபட அப்பொழுதும் கூட அக்கறை காட்டாமல் கோபி பொய்க் காரணங்களைக் கூறி கிளம்புகிறார்.
ராதிகா கோபத்தில் மயூவை அடிக்க போகும் பொழுது, கோபி அங்கு வந்து பட்டாசுகளை கொடுத்து ஒன்றாக அவர்கள் பட்டாசு வெடிக்கிறார்கள். பின்னர் தீபாவளியும் இவர்களோடு சேர்ந்து கொண்டாடுவேன் என கோபி கூறுகிறார். நடுவில் ராதிகாவின் ராதிகாவின் அம்மாவும் கோபியும் சேர்ந்து பாக்கியவிடம் உணவு வாங்க வேண்டாம் என நிர்பந்திக்கிறார்கள்.
அடுத்தநாள் அனைவரும் ஒன்றாக பாக்யாவின் சமையலை உண்ண, கோபி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபரை தொடர்பு கொண்டு பொய் கூறி தன்னை வீட்டிலிருந்து அழைத்து செல்லுமாறு கூறுகிறார்.