Baakiyalakshmi today episode 29.11.2021 review
Bakkiyalakshmi Gopi lies again
பாக்கியலட்சுமி சீரியல் இன்று ராதிகாவின் வீட்டிற்கு செல்வதற்காக கோபி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபரை வரவழைத்து பொய்க் காரணம் கூறி கிளம்புகிறார்.
ராதிகாவின் வீட்டில் கோபி மீண்டும் ஒருமுறை உணவு உண்டு கஷ்டப்படுகிறார். இதை அனைத்தையும் ராதிகாவின் தாய் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் ராதிகாவிடம் கோபியை விவாகரத்து வாங்க சொல்லுமாறு கூறுகிறார். ராதிகா அதற்கு மறுப்பு சொல்லாமல் தனது விவாகரத்து முடியட்டும் எனக் கூறுகிறார்.
வீட்டில் செல்வி, பாக்யா, எழில், இனியா பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெனியின் பெற்றோரும் வர, அவர்களிடம் செழியன் மன்னிப்பு கோருகிறார். ஈஸ்வரி கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.