Baakiyalakshmi today episode 29th May 2024 review| Vijay Television
Baakiyalakshmi Jeni in shock PC Hotstar.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனி குழந்தையை தூங்க வைத்துவிட்டு அவரும் அசதியாக தூங்குகிறார். ராமமூர்த்தி யாரும் வராததால் எந்த மாத்திரையை எப்போது போடுவது என தெரியாமல் மாத்திரையே போடாமல் உணவு உண்டு விட்டு உறங்குகிறார். பாக்யா ஹோட்டலில் அனைவரிடமும் குடிகாரர்களால் எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டில் தாத்தா மாத்திரை சாப்பிடவில்லை என்பதை அறிகிறார். அவரை எழுப்பினால் அவர் மயங்கி மயங்கி விழுகிறார். எழிலுக்கு உடனடியாக தொலைபேசியில் அழைத்து அவரை வரவைத்து ராமமூர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஜெனி எல்லாம் தன் தவறால்தான் என தேம்பித் தேம்பி அழுகிறார். பின்னர் தாத்தா வீட்டிற்கு வந்து விடுகிறார். ரத்த அழுத்த மாத்திரைகளை போடாததால் மயங்கி விட்டதாக கூறுகிறார்கள் யார் சமாதானம் கூறினாலும் ஜெனி எல்லாம் தன் தவறு தான் என நம்புகிறார்.
கோபியின் வீட்டில் கமலா ராதிகாவிற்கு காபி கொடுக்கிறார். பின்னர் ஈஸ்வரிக்கும் காபி கொடுக்கிறார். காபி நன்றாக இல்லை என ஈஸ்வரி கூற கமலா அப்பொழுது திருப்பி கொடுத்துவிடுங்கள் என கேட்கும் பொழுது கை தவறி காபி கீழே கொட்டுகிறது. ஆனால் ஈஸ்வரி தான் கோபத்தில் காபியை கொட்டி விட்டார் என அபாண்டமாக பழி போடுகிறார் கமலா. ராதிகாவும் கமலாவும் மாத்தி மாத்தி ஈஸ்வரியையே குறை சொல்ல அவர் கோபியை உடனடியாக வருமாறு தொலைபேசியில் அழைக்கிறார்.