பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி அதிகரிக்கிறது கமலாவும் ஈஸ்வரியும் காபி கொட்டிய விவகாரத்தை வைத்து மாத்தி மாத்தி விவாதம் செய்கிறார்கள். ராதிகாவும் காபியை கொட்டியது ஈஸ்வரி தான் எனக் கூறுகிறார். ஒரு கட்டத்தில் கடுப்பாகி கோபி தனது தாயை தன்னுடன் அவரின் கிளவுட் கிச்சனுக்கு அழைத்து செல்கிறார். அங்கு கோபி நிறைய தவறுகள் நடந்திருப்பதை பார்த்து அதை சமாளிக்க திணறுகிறார். அதுமட்டுமில்லாமல் அவரே மளிகை சாமான் வாங்கும் ஆர்டரை கொடுக்க மறந்திருக்கிறார். இந்த சமயத்தில் ஈஸ்வரி தனக்கு வெந்நீர் வேண்டும் என கேட்க அதற்கும் சலிப்படைகிறார் கோபி. பின்னர் ஈஸ்வரி இனி இங்கே எல்லாம் நான் வரமாட்டேன் என்னால் இங்கு உட்கார்ந்து இருக்க முடியவில்லை என புலம்புகிறார்.
பாக்யாவின் வீட்டில் ஜெனி அழுது கொண்டே இருக்க அவரை தேற்றி ஆறுதல் கூறுகிறார்கள். செழியனும் பாக்யாவும் குழந்தை பிறந்திருப்பதனால் அதற்கே நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும் அதனால் நடந்தது ஒன்றும் பெரிய தவறு இல்லை என கூறுகிறார் பாக்யா. கோபி ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வர அங்கு மயு தான் வரைந்த சித்திரத்தை கோபியிடம் காட்டுகிறார். பின்னர் கமலா வேண்டுமென்றே ஈஸ்வரியை வம்பு இழுக்க வாக்குவாதம் மீண்டும் முத்துகிறது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி இந்த வீட்டை விட்டு கமலாவை அனுப்பியே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். கோபி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.