கோபி தலையில் துண்டு! Baakiyalakshmi today episode 31st May 2024 Review
Baakiyalakshmi Gopi devastated PC Hotstar.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எவ்வளவு முயன்றும் கமலா மற்றும் ஈஸ்வரியின் சண்டையை முடித்து வைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபமாகி அவர் ஈஸ்வரி இடம் என் வேலையை செய்யவிடாமல் நீங்கள் தான் தடுக்கிறீர்கள் என கூறுகிறார். நீங்கள் அமைதியாக இருங்கள் எனவும் கூற ஈஸ்வரி நான் இப்பொழுதே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறேன் என நாடகமாடுகிறார். கோபி கெஞ்சி கூத்தாடி அவரது அம்மாவை சரி செய்கிறார்.
பாக்கியாவின் வீட்டில் பாக்யா மற்றும் எழில் சாமி கும்பிடுகிறார்கள். பின்னர் பாக்யா பார் திறப்பு விழாவிற்கு சமைக்க செல்கிறார். அமிர்தாவிடம் அனைத்து வேலைகளையும் ஒப்படைக்கிறார். ஜெனி சிறிது வருத்தப்பட்டாலும் புரிந்து கொள்கிறார். ஜெனிக்கும் பாக்யா சில வேலைகள் குடுக்கிறார். வேறு யாரும் துணைக்கு வேண்டாம் எனக்கூறி பாக்யா தனியாகவே செல்கிறார்.
காலையில் ஈஸ்வரி இன்னும் கோபமாகவே இருக்க கோபி தன் தாய்க்கு காபி போட்டு கொடுக்கிறார். பின்னர் ஈஸ்வரி மேலும் கோபியை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கிறார். கோபி அந்தக் கோபத்தை கமலாவிடம் காட்டுகிறார். ராதிகா வேலையை சரியாக பார்க்குமாறு கோபியிடம் கடுப்படிக்கிறார்.