ஜெனியின் குழப்பம்! Baakiyalakshmi today episode 3rd June 2024 review
IMG 20240603 140613.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரிக்கும் கமலாவுக்குமான சண்டை மேலும் தொடர்கிறது கமலா சமைத்து வைத்து காத்திருக்க ராதிகா ஈஸ்வரியையும் அழைக்கலாம் என கூறுகிறார். ஆனால் கோபி வரும்பொழுது அவரது கிச்சனிலிருந்து தனக்கும் ஈஸ்வரிக்கும் உணவு கொண்டு வந்ததாக கூறுகிறார். இதை வைத்து வாக்குவாதம் ஆரம்பிக்கிறது. கடைசியில் ஈஸ்வரி கோபித்துக் கொண்டு சென்று விடுகிறார்.
ஜெனி தான் தற்பொழுதெல்லாம் மிகவும் கோபப்படுவதாகவும் தேவையில்லாத வார்த்தைகளை அமிர்தாவிடமும் செழியனிடமும் கூறி விடுவதாக கூறி வருந்துகிறார். எழில் அவரை சமாதானம் செய்கிறார். அப்பொழுது அங்கு வரும் செழியன் இன்று இரவு ஜெனியும் நானும் டின்னருக்கு வெளியே செல்கிறோம் எனக் கூறுகிறார். பாக்யா குழந்தையைப் பார்த்துக் கொள்வதாக கூறி விட ஜோடியாக செழியனும் ஜெனியும் உணவகத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஜெனிக்கு பிடித்தமான உணவுகளை இவரே ஆர்டர் செய்கிறார். இனியாவின் கல்லூரி ப்ராஜெக்டுக்கு விமல் உதவுகிறார். இனியா மிகவும் மகிழ்ச்சி அடைய பாக்யா இவர்கள் இருவரையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்.