Baakiyalakshmi today episode review 12.01.2024 | Vijay Television
Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் சோகமாக அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர் செழியனை பற்றி ஜெனியின் அப்பா கூறிய புகார்களை அடுக்குகிறார். அதில் சிலது உண்மை சிலது பொய் என தெரிந்ததும் ஈஸ்வரி கொந்தளிக்கிறார். அவர் தன் பங்குக்கு ஜெனி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆனால் செழியன் ஜெனி மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூற விரும்பவில்லை எனவும், தான் செய்தது தான் தவறு எனவும் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி கோவமாக விலகுகிறார்.
எழிலும் அமிர்தாவும் கோயிலுக்கு செல்ல அங்கும் கணேஷ் இருப்பதை எழில் பார்க்கிறார். அமிர்தாவை கோவிலுக்குள் அனுப்பி விட்டு கணேசன் சட்டை காலரை பிடித்து மிரட்டுகிறார். தன்னுடன் தான் அமிர்தாவும் நிலாவும் இருப்பார்கள் என எழில் கூற கணேஷ் எத்தனை நாள் என பார்க்கலாம் என மிரட்டி விட்டு செல்கிறார். பின்னர் காரில், ராதிகா கோபியிடம் கோபப்படுகிறார். கோபியின் அலுவலகத்திற்கு வந்ததாகவும் அங்கு பூட்டு தொங்கியதாகவும் கூறுகிறார். தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என கோபி பயந்து எப்பொழுதும் போல் பொய்களாக சொல்லி சமாளிக்கிறார். இறுதியில் நிலா பாப்பா ஈஸ்வரியிடம் விளையாட வருமாறு கூற குழந்தையிடம் போய் ஈஸ்வரி நீ இன்று இருப்பாய் நாளை சென்று விட்டால் நான் வருந்துவேன் என கூறி முகத்தில் அடித்தது போல் அனுப்பி விடுகிறார். அமிர்தா சோகமாக மாடிக்கு செல்வதோடு எபிசோட் முடிவடைகிறது.