Baakiyalakshmi today episode review 13.01.2024 | Vijay Television
Baakiyalakshmi Gopi caught PC Hotstar.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி சற்றும் யோசிக்காமல் நிலாவையும் அமிர்தாவையும் காயப்படுத்துகிறார். எழில் அதற்கு கோபமாகி இது தவறு எனக் கூறுகிறார். ஈஸ்வரி உன் மனைவிக்காக மட்டும் பேசாதே எனக்கும் மனது கஷ்டமாக இருக்கும் எனக் கூறுகிறார். பாக்யா எழிலுக்கு துணையாக பேசுகிறார். பின்னர் எழில் கடுப்பாகி நான் வேண்டுமென்றால் தனி குடித்தனம் சென்று விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என கூறி கிளம்புகிறார். ஈஸ்வரி அதற்கு அதிர்ச்சி அடைகிறார்.
பின்னர் செழியன் தனியா உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்க கோபி அவருடன் சேர்ந்து அவரும் குடிக்கிறார். பெண்களே இப்படித்தான் என அவர் பேசிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் எழிலும் அங்கு வருகிறார். எழிலும் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார். எழில் கோபி மீது தனக்கு இன்னும் கோபம் இருக்காது இருப்பதாகவும் இருந்தாலும் கோபி கணேஷ் வந்த பொழுது நடந்தது பாராட்டுவதற்கு உரியது என கூறுகிறார். அப்பொழுது அங்கு ராதிகா வருகிறார். பின்னர் பாக்யா வருகிறார். பாக்யா இவர்கள் குடிப்பதை கண்டுபிடித்து தன் மகன்களை அடித்து இழுத்து செல்கிறார். ராதிகாவோ கோபியை திட்டி கோபியின் அலுவலக பிரச்சினைகளை தான் வந்து தீர்த்து வைப்பதாக கூறியோ தனது அலுவலகத்தை ஏற்கனவே மூடிவிட்டதால் பதட்டமாகி வேண்டாம் வேண்டாம் என கூறுவதோடு எபிசோடு முடிவடைகிறது.