Baakiyalakshmi Today episode review | 13.07.2022 | Vijay Tv
Baakiyalakshmi leaves the house
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்கியா கோபியை பார்த்து சரமாரியாக கேள்விகள் கேட்கிறார். இத்தனை இத்தனை நாள் அவர் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டது கோபியின் மேல் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமே எனவும் கூறுகிறார்.
இப்பொழுதும் கூட ஈஸ்வரி எழிலை தடுத்து நிறுத்திவிட்டு கோபியை பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறுகிறார். இனி ராதிகாவிடம் பேசக்கூடாது எனவும் அலுவலக வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டும் எனவும் குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என எழில் கொந்தளிக்கிறார்.
ஈஸ்வரி ஜெனியை அனுப்பி பாக்யாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுமாறு கூற பாக்யா அதை மறுக்கிறார். கோபியிடம் உங்களுக்கு நான் இந்த வீட்டை விட்டு சென்றாள் சந்தோஷம் என பலமுறை கூறியிருக்கிறீர்கள். இன்று உங்களுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்கிறேன் என பாக்யா வீட்டை விட்டு வெளியாகிறார்.
அனைவரும் அதிர்ச்சியாகி ரோட்டிற்கு வர பாக்யா நிற்காமல் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அவருடன் எழில் மற்றும் செல்வியும் செல்கிறார்கள். இனியா, செழியன், ஈஸ்வரி, மற்றும் ராமமூர்த்தி கதற, வீட்டிற்குள் கோபி அதிர்ச்சியில் முழிக்கிறார்.