பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அடிமேல் அடி விழுவது தான் இன்றைய எபிசோடில் முக்கிய சம்பவம். ராதிகாவின் அம்மா கமலா உணவை சமைத்துவிட்டு ராதிகாவை அழைக்கிறார். ராதிகா ராதிகா கோபியை அழைக்க கோபியோ தன் தாய் ஈஸ்வரியை உணவருந்த அழைக்க செல்கிறார். இதற்கு நடுவில் கமலா ஈஸ்வரியை பற்றி ராதிகாவிடம் புலம்புகிறார். ஈஸ்வரி கமலாவை பற்றி கோபியிடம் புலம்புகிறார். பின்னர் ஈஸ்வரி உணவருந்த வந்துவிட்டு அவல் உப்புமா தான் உணவு என தெரிந்ததும் கடுப்படிக்கிறார். சப்பாத்தி வேணும் என கேட்கிறார். அதற்கு கமலாவும் கடுப்பாகிறார். ராதிகா கமலாவை வெளியே அழைத்து செல்கிறார்.
பாக்யாவின் வீட்டில் ராமமூர்த்தி ஈஸ்வரியை பிரிந்து வாடுவார் என நினைத்து எழிலும் அமிர்தாவும் அவருடன் நேரம் செலவழிக்கின்றனர். பின்னர் பாக்யா அதைப்பற்றி ராமமூர்த்தி இடம் விசாரிக்க அவரோ பரவாயில்ல ஈஸ்வரி பட்டு திருந்த வேண்டும் எனக் கூறுகிறார்.
மீண்டும் ராதிகா மற்றும் கோபியின் வீட்டில் அடுத்த பூகம்பம் வெடிக்கிறது. உறங்குவதற்கு இரண்டே அறைகள் உள்ளன ஒன்றில் கோபியும் ராதிகாவும் மற்றொன்றில் மையவும் கமலாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஈஸ்வரிக்கு எந்த அறையை கொடுப்பது என பிரச்சனை ஈஸ்வரி யாரிடமும் கேட்காமல் அந்த அறையில் நான் தான் படுப்பேன் என ஒரு அறைக்குள் சென்று விட்டு கமலாவின் துணிகளை வெளியே வைத்து விடுகிறார். இதைப் பற்றி பேசி கடுப்பாகி ராதிகா இரண்டே நாட்களில் ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என கோபியிடம் கூறுகிறார். ஹாலில் கமலாவும் மயூவும் தூங்குகிறார்கள்.