பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு கடந்த சில நாட்கள் போல் இல்லாமல் பரபரப்பாக தொடங்கியது. கோபி நீதிமன்றத்தில் இருந்து வந்த கடிதத்தை உள்ளே எடுத்து வர, பாக்யா அவரது கையில் இருந்து அதை பிடுங்கினார். அதை எழிலிடம் கொடுத்து படிக்க சொல்ல எழில் அது விவாகரத்துக்கான கடிதம் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
பாக்கியா கோபமாக விவாகரத்தை பற்றி கேட்க கோபி இடத்தை காலி செய்ய முயற்சித்தார். செழியன் இனியா இவர்கள் கூட அதிர்ச்சியாகி கோபியை கோபமாக பார்த்தார்கள். ஈஸ்வரி தனது மகனை தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்க கோபி விளக்கம் கூற வரும்போது பளார் என அறைகிறார்.
இன்னும் இரண்டு முறைகள் ஈஸ்வரி கோபியை அறைந்தார். இப்பொழுது சில எபிசோடுகளாக அமைதியாக இருந்த ராமமூர்த்தி ராதிகாவை பற்றி தனக்கு முன்னமே தெரியும் எனவும் அதை கோபியிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகிறார். கோபியிடம் கோபமாக பேசிவிட்டு தான் இவர் கீழே விழுந்தார் என்பதையும் கூற குடும்பம் அதிர்ச்சி அடைகிறது.
எழிலும் தன் பங்கிற்கு தனது அப்பாவைப் பற்றி அவர் தீம் பாக்கிற்கு வராமல் ராதிகாவோடு போனதைப் பற்றி கூறுகிறார். பாக்கியா கோவமாக நான் வேண்டாம் என்று நினைத்த அவரிடம் கெஞ்ச விருப்பமில்லை எனக் கூறுகிறார். ராதிகாவிற்கும் கோபிக்கும் ஆன திருமணத்தை தான் முன்னிருந்து நடத்த வேண்டுமா எனவும் கேட்டு தான் எந்த அளவு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என மேலும் கொதிப்படைகிறார்.
இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது. நாளை பாக்கியலக்ஷ்மியில் இன்னும் அதிரடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.