Baakiyalakshmi Today Episode Summary | 11.08.2022 | Vijay Tv
Baakiyalakshmi Gopi yells after divorce
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எங்கோ வெளியே கிளம்ப, ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். கோபி எல்லா தவறும் பாக்யாவின் மீதுதான் என்பது போல் பேச ஆரம்பிக்கும் பொழுது பாக்யா மற்றும் எழில் அங்கே வருகிறார்கள்.
கோபி பாக்கியாவை வீட்டிற்குள் வரக்கூடாது என எச்சரிக்க பாக்யா அதையும் மீறி வருகிறார். தனது தவறுகளை மறைத்து விட்டு கோபி, பாக்கியாவின் முடிவை திமிர் என்றும் ஏற்கனவே வேண்டும் என முடிவு செய்து எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறுகிறார். செழியன் தனது அப்பாவிற்கு ஒத்து ஊத, எழில் தன் அம்மாவுக்காக பேசுகிறார்.
ஈஸ்வரியும் பாக்யாவின் முடிவு தவறு என்பது போலவும் கோபி ஒரு ஆம்பளை அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என பேசுகிறார். கடைசியாக ராமமூர்த்தி மற்றும் ஜெனி பாக்யாவை பேச கூப்பிட பாக்யா கோபியை முறைப்பதோடு எபிசோடு முடிவடைகிறது.