Barathi Kannamma today episode 03.03.2022 written update | Vijay Television
Picsart 22 03 03 10 09 19 673
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, லக்ஷ்மி பாரதியோடு காரில் வருவதை பார்த்த கண்ணம்மா, லக்ஷ்மியை திட்டுகிறார். குமார் அண்ணனிடம் பொய் கூறியதற்கும் கோபப்படுகிறார். பின்னர், பாரதி, கண்ணம்மா மற்றும் குழந்தைகள் ஒரே காரில் திரும்ப, அதை மாயாண்டி பார்க்கிறார்.
வீட்டிற்கு வந்தபின் பாரதி கண்ணம்மாவிடம் லக்ஷ்மியை பொறுப்பாக பார்த்து கொள்ளாததற்கு திட்டுகிறார். கண்ணம்மாவோ பாரதி லட்சுமியின் அப்பா போல இப்பொழுதுதான் நடந்துகொள்வதாக சந்தோஷப்படுகிறார்.
பாரதியிடம் இனி இப்படி நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறி சாக்லேட் கொடுக்க, அதை மாயாண்டி வீடியோ எடுக்கிறார். ஹேமாவை சரி செய்து அதை வைத்து பாரதியை அடையலாம் என நினைக்கும் வெண்பாவிற்கு இந்த வீடியோ பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.