Barathi Kannamma 2 Today Episode | 01.06.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 01.06.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா தன்னால் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைத்து நினைத்து வருந்தினார். என் காலம் முடிந்துவிட்டது, என்னை காப்பாற்றி அவளது எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறி ஆக்கி விட்டாலே என்று புலம்பினார். அதனால் அஞ்சலி மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்தார்கள். இப்படி ஒரு வெண்பாவை இதுவரை பார்த்தது இல்லை. என் மேல் இவளோ பாசம் வைத்து இருக்கிறாள் என்று சௌந்தர்யா கூறினார். அதையும் கேட்டு பாரதி மேலும் அவரை சமாதானம் செய்து சாப்பிட வைத்து தூங்க வைத்தார். பின் பாரதி தனக்கு மனக்கவலை என்று கூறி கண்ணம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேச ஆரம்பித்தார். இருவருமே பேச ஆரம்பித்தார்கள். பின் கண்ணம்மா யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று பாரதியுடன் ஃபோனில் பேசினார். அடுத்த நாள் மீண்டும் சௌந்தர்யா வெண்பாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். வெண்பா இவரை பார்த்து நலம் விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….