பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்திக்கு வாங்கிய நகைகள் அனைத்தையும் கடையில் கொடுத்து உண்மை தங்கமா இல்லை, போலியா என்று சரி பார்க்க வேண்டும் என்று கூறினார் மாப்பிள்ளையின் அம்மா. அதற்கு கண்ணம்மா கோபப்பட்டார். அப்படி போலி நகையை கொடுக்க எங்களுக்கு என்ன அவசியம் என்று கேட்டார். ஆனால் பெரியவர்கள் பேசும்போது நீ யார் பேச என்று அவரை பேச விடாமல் செய்துவிட்டார். பின் சாந்தி லேசாக குரலை உசத்தி பேசினாலே பயப்படுவாள், அதனால் அவரை தவறு செய்தாலும் மன்னித்து விடுங்கள் என்று கூறினார் பாக்கியலட்சுமி. ஆனால் அதற்கும் அவர் வேண்டும் என்றே எடக்கு மடக்காக பேசினார். சற்று நேரத்தில் கண்ணம்மா சமையல் அறையில் ஒரு வேலையாக வந்தார். ஆனால் வந்த இடத்தில் அவரது மாமாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….