Barathi Kannamma 2 Today Episode | 25.05.2023 | Vijaytv
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதியிடம் கண்ணம்மா, தண்டம், மது அனைவரும் என்ன நடந்தது நீ எங்கே இருந்தாய், இப்போது வெண்பா என்ன நிலையில் உள்ளார் என்று விசாரித்தார்கள். சௌந்தர்யா அம்மாவுக்கு பெரிதாக காயம் இல்லை, ஆனால் வெண்பாவின் முகம் முழுதும் வெந்து போய் விட்டது என்று கூறினார். பின் சற்று நேரத்தில் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். சௌந்தர்யா, பாரதி மற்றும் அஞ்சலியை வீட்டுக்கு கிளம்புமாரு கூறினார் வெண்பாவின் அப்பா. முதலில் சௌந்தர்யா மறுத்தாலும், அங்கு இருந்த நர்ஸ் முதல் அனைவரும் இத்தனை பேர் இங்கு இருக்க கூடாது என்று கூறியதால் அவர்கள் கிளம்பினார்கள். கொஞ்ச நேரத்தில் வெண்பா கண் விழித்தார். ஆனால் முளித்ததும் எரிச்சல் தாங்காமல் துடித்தார். மேலும் தன் முகம் எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்துகொள்ள நினைத்தார். அவர் முகத்தை கண்ணாடியில் பார்த்து துடித்துப்போனார் . அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…