Barathi Kannamma 2 Today Episode | 31.05.2023 | Vijaytv
Barathi Kannamma 2. 31.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மாவிடம் அவரது அப்பா நம் குடும்பத்துக்கு சௌந்தர்யா அம்மா எத்தனை உதவி செய்து இருக்கிறார். அவருக்கு காலம் முழுதும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் பாரதியுடன் சேர்ந்து பேசுவது பழகுவதை பற்றி பேசினார். அவரோடு நட்பை தாண்டி வேறு எந்த நினப்பும் உனக்கு வர கூடாது என்று கூறினார். இதனால் சித்ரா கண்ணம்மாவின் புகைபடத்தை வைத்து பார்த்து, கண்டிப்பாக என்னால் இந்த குடும்பம் தலை குனிய விட மாட்டேன் என்று கூறினார். அடுத்த நாள் வெண்பாவின் இந்த நிலையை மாற்ற முடியாதா, வேறு எதுவும் வழி உள்ளதா என்று விசாரித்தார் பாரதி. ஆனால் டாக்டர் இதற்கு ஒரே வழி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மட்டுமே, ஆனால் அதற்கு 10 லட்சத்துக்கு மேல் செலவு ஆகும் என்று கூறினார். உடனே பாரதி எத்தனை லட்சம் ஆனாலும் பரவாயில்லை, எனக்கு வெண்பா பழைய நிலைக்கு வந்தால் மட்டும் போதும் என்று கூறினார். அதை ஷர்மிளா கேட்டு இதை அவனும் அவனது அம்மாவும் தான் செய்ய வேண்டும் என்று கோவமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…