பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அஞ்சலியின் வளைகாப்பு இனிதே தொடங்கியது. ஒருபக்கம் கண்ணம்மாவை சகஜமாக்க சௌந்தர்யா அவரிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம், கண்ணம்மாவை வெறுப்பேற்ற, வெண்பாவிடம் பாரதி மிக நெருக்கமாக நடந்து கொள்கிறார். அவர்களுக்குள் திருமணம் முடிந்தது போல் அவர் நடித்துக் கொண்டிருக்க, அஞ்சலி அதை பார்த்து எரிச்சலடைகிறார்.
இதை தாங்க முடியாமல் கண்ணம்மா வெளியே வருகிறார். சௌந்தர்யாவை பார்த்து இரட்டை குழந்தைகளை பற்றி கேட்க அவர் நெருங்க, சௌந்தர்யா நழுவி ஓடுகிறார். ஒருவழியாக அஞ்சலியின் வளைகாப்பு நடந்து கொண்டிருக்கும் போது, பாரதி அஞ்சலிக்கு சந்தனம் பூச வருகிறார். வெண்பாவும் கூட வருவதைப் பார்த்து அஞ்சலியும் குடும்பத்தினரும் எரிச்சலடைகிறார்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு என அஞ்சலி வெண்பாவிற்கு திருமணமாகாததை கூறிவிடுகிறார் அனைவரும் அதிர்ச்சியாக எபிசோடு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்