பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவிற்கு பாரதிக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதை அஞ்சலி சபையில் போட்டு உடைக்க, கண்ணம்மா அதிர்ச்சியாகிறார். வெண்பாவை அங்கிருக்கும் உறவினர் அவமானப்படுத்த, அவரும் விலகி வருகிறார். பின்னர், பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து அஞ்சலிக்கு ஆசிர்வாதம் செய்கிறார்கள். ஒருவழியாக அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்க அதையும் அசிங்கப்பட்ட வெண்பாவே எடுக்கிறார்.
கடைசியாக, சௌந்தர்யாவும் வேணுவும் தனியே அமர்ந்து இருக்கும் பொழுது கண்ணம்மா அங்கு வந்து கேள்விகளை கேட்க, பாரதியின் சத்தியத்தால் தான் தாங்கள் வெண்பாவை பற்றிய உண்மையை கூறவில்லை என சாதிக்கிறார்கள். கூடவே, ஹேமாவை பற்றிய கேள்விக்கு சௌந்தர்யா ஹேமா ஆதரவற்ற குழந்தை எனவும், தாங்கள் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறுகிறார்கள் கண்ணம்மா இதை நம்பாமல், ஹேமா என்னுடைய இன்னொரு குழந்தைதானே என கோபமாக கேட்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்