குழப்பத்தில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 06.10.21 update
Barathi Kannamma Venba Soundarya
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவை கேள்விகள் கேட்கின்றது. இன்னொரு குழந்தை கிடைத்தாலும் கூட கணவனை விவாகரத்து செய்ய வேண்டுமா எனவும், வேறு வழியில் சௌந்தர்யாவிடம் பேசி குழந்தையை கண்டுபிடிக்கலாம் எனவும் மனசாட்சி கூறுகிறது. குழப்பத்தில் கண்ணம்மா மனசாட்சியை போக சொல்லி கத்துகிறார். அதைப் பார்த்து லட்சுமி பயப்படுகிறார்.
அஞ்சலி தன்னிடமிருந்த மாத்திரைகள் தீர்ந்தவுடன் புது மாத்திரை வாங்கலாமா வேண்டாமா எனவும் வெண்பாவை பற்றியும் யோசிக்கிறார். அப்பொழுது அகிலன் கொடுத்தார் என ஹேமா அதே மாத்திரைகளை கையில் கொடுக்கிறார். நீண்ட யோசனைக்குப் பின் இந்த மாத்திரைகளை போட வேண்டாமென அஞ்சலி முடிவு செய்கிறார். அப்பொழுது தொலைபேசியில் அழைத்த வெண்பாவிடம் சற்று திமிர் ஆகவும் பதிலளிக்கிறார்.
ஹேமாவும் பாரதியும் விளையாடிக்கொண்டிருக்க சௌந்தர்யாவும் வேணுவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். மகிழ்ச்சியில் வெண்பா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். கண்ணம்மா இன்னும் குழப்பத்தில் இருக்கிறார்.