பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்ற நிறைய காரியங்களும் சேட்டைகளும் செய்ய, பாரதியே அதிர்ச்சியாகிறார். வெண்பாவும் கோபம் கொள்கிறார். பின்னர், பாரதி எனக்கும் திருமணமாகா விட்டாலும், கண்ணம்மாவிற்கு தன் வாழ்வில் இடமில்லை என் கண்ணம்மாவிடமே கூறுகிறார். இதைக்கேட்டு கண்ணம்மாவும் அதிர்ச்சியாகிறார். கோபத்தில் வெண்பா அஞ்சலிக்கு கொடுத்த மாத்திரைகளை இரட்டிப்பு ஆக்குகிறார். கண்ணம்மா இரவெல்லாம் உறங்காமல் ஹேமா தன் மகளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்.
பின்னர், அவமானம் தாங்க முடியாத வெண்பா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். பாரதி சரியான நேரத்தில் அவரை காப்பாற்றுகிறார். கண்ணம்மாவை எந்த காரணம் கொண்டும் மன்னிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துவிட்டு செல்கிறார். மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.