Barathi Kannamma today episode – 01.03.2022 review
Barathi Kannamma Today episode 01.March.2022 review | பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
Barathi Kannamma Venba Shocked scene
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவும் லக்ஷ்மியும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, லட்சுமி தனது பள்ளியில் இருக்கும் காவலாளிக்கு கேக் கொடுக்கிறார். அவர் லஷ்மியின் அப்பாவைப் பற்றிப் பேச ஹேமா கோபப்படுகிறார்.
வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ளும் முயற்சியாக, ஹேமாவிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார். அதற்காக பாரதியை ஹேமாவின் பள்ளிக்கு அழைத்து செல்கிறார். லட்சுமி யோசனையில் அமர்ந்திருக்கிறார். தனது தந்தை யார் என தெரிய வேண்டும் என முடிவு செய்கிறார். அப்பொழுது வந்த கண்ணம்மாவிடம் தனது தந்தைக்கு வேறு திருமணம் முடிந்து விட்டதா என கேட்க, கண்ணம்மா கோபப்பட்ட பின், இனிமேல் இதைப் பற்றி கேட்க போவதில்லை என உறுதி அளிக்கிறார் லக்ஷ்மி.
பள்ளி முதல்வரிடம் வெண்பா பாரதி மற்றும் ஹேமா பேசிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அங்கு கண்ணம்மாவும் லக்ஷ்மியும் வருகிறார்கள். கண்ணம்மா சரியான விதத்தில் பேசி வெண்பாவை கிண்டல் செய்கிறார். பாரதியும் வெண்பாவும் அண்ணன்-தங்கை போல எனவும் கூறுகிறார். கடுப்பில் கண்ணம்மாவின் மீதுள்ள வன்மத்தை வெண்பா கக்க, பாரதியோ கண்ணம்மா நடிக்கவில்லை, நீதான் புதிதாக மாறிவிட்டாய், என ஹேமாவின் மீது கண்ணமாவிற்கு இருக்கும் பாசத்தை பற்றி கூறுகிறார்.