அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து? Barathi Kannamma today episode 11 September 2021 update
Barathi Kannamma Anjali Akhilan
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று துளசி கண்ணம்மாவிடம் பொய் மேல் பொய் கூற, யாரையும் நம்ப முடியாமல் கண்ணம்மா தவித்து போகிறார். வெண்பாவின் ஹேமாவை நன்றாக பழக வைக்க வேண்டும் என பாரதி முடிவு செய்கிறார். வெண்பாவின் வீட்டிற்கு ஹேமாவை கூட்டி செல்கிறார். இது ஹேமாவுக்கு பிடிக்கவில்லை. போன இடத்தில் பாரதி சௌந்தர்யா அம்மாவையும் துளசியையும் பற்றி புலம்புகிறார். வெண்பாவிற்கும் துளசி மீது சந்தேகம் வருகிறது.
பின்னர், அஞ்சலி ஒரு குறி சொல்லும் பாட்டியிடம் பேசுகிறார். அவரோ குழந்தையின் உயிருக்கும் அஞ்சலியின் உயிருக்கும், இருவருக்குமே ஆபத்து இருக்கிறது என மறைமுகமாக கூறுகிறார். அஞ்சலி தன் குழந்தை உயிரை காப்பாற்ற நினைத்தாலும், ஆண்டவனின் முடிவு வேறாக இருக்கிறது எனக்கூறுகிறார். அவர் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்கு முன் அகிலன் அங்கு வந்து அவரை விரட்டி விடுகிறார்.
ஆட்டோ ஓட்டும் குமார் அண்ணனுக்கும் பாரதியின் குழந்தைதான் லட்சுமி என தெரிந்து விட்டது. கண்ணம்மாவிடம் இதை கூறி ஹேமா கண்ணம்மா உடைய குழந்தையாக இருக்கலாம் எனக் கூறுகிறார். இது கண்ணம்மாவுக்கு மேலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது.