Barathi Kannamma today episode 12.03.2022 review | Vijay Television
Barathi Kannamma romance look
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மாவுக்கு பாரதி மருத்துவம் பார்த்து முடிக்க, கண்ணம்மா தானே பணம் கட்டுவதாக கூறி விட்டு பணம் கட்டுகிறார். பாரதியும் கண்ணம்மாவும் பரஸ்பரம் கண்களிலேயே காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். விதிதான் அவர்களை பிரித்து வைத்திருக்கிறது.
வீட்டிற்கு வரும் பாரதி நடந்தவை குறித்து முதலில் பொய் கூறிவிட்டு, பின்னர், கண்ணம்மா தான் தன்னை காப்பாற்றியதாக ஏற்றுக் கொள்கிறார். இதைக் கேட்டு சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ந்து போகிறார்கள். கண்ணம்மாவின் வீட்டில் லட்சுமி தனது அம்மாவின் நிலையை குறித்து புலம்புகிறார்.
ஹேமாவை மூளைச்சலவை செய்வதற்காக சௌந்தர்யா மற்றும் அகிலன் கண்ணம்மாவை குறித்து மிகவும் பெருமையாக பேசுகிறார்கள். இதைக்கேட்டு ஹேமா தனது அப்பாவிற்கு சரியான ஜோடி சமையல் அம்மா தான் என முடிவு செய்கிறார்.