வெண்பாக்கு தெரிந்த ரகசியம்! Barathi Kannamma today episode 13.09.2021 update
Barathi Kannamma Venba finds truth
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எப்பொழுதும் போல் சோபாவில் அமர்ந்து வேணுவும் சௌந்தர்யாவும் புலம்பிக் கொண்டிருக்க, அங்கு பாரதியின் ஹேமாவும் வருகிறார்கள். சௌந்தர்யா தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை பற்றி சமாளிக்கிறார். பாரதி லட்சுமிக்கும் சேர்த்து துணி வாங்கி வந்து இருப்பதை பார்த்து மகிழ்கிறார்கள். பாரதி எரிச்சலில் கிளம்புகிறார்.
வெண்பா துளசியைப் பற்றி யோசித்து சௌந்தர்யாவும் துளசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர், அவர் துளசியின் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு கண்ணம்மாவும் துளசியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கண்ணம்மா பேசுவதை கேட்டபின் வெண்பாவிற்கு ஹேமா மற்றும் லட்சுமி இருவருமே இரட்டை குழந்தைகள் என புரிகிறது. இது சௌந்தர்யாவின் வேலை என்பதையும் முடிவு செய்கிறார்.
அஞ்சலி குறி சொன்ன பாட்டியின் வார்த்தைகளை நினைத்து அழுக, அகிலன் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். மீண்டும் ஒருமுறை சௌந்தர்யாவும் வேணும் மாறி மாறி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.