Barathi Kannamma Today Episode | 18.01.2023 Review | Vijay Tv
Barathi Kannamma shock twist today
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று சௌந்தர்யா பாரதியை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கண்ணம்மா இரு குழந்தைகளுடன் வந்து சேர்கிறார். கடைசியாக பாரதி பேசும் பொழுது லட்சுமியை எண்ணி மகிழ்ச்சியடைந்து ஹேமாவை எண்ணி வருத்தம் அடைந்ததாக சௌந்தர்யா கூறுகிறார். இதைக் கேட்டு ஹேமா கதறியழ ஆரம்பிக்க அனைவரும் சேர்ந்து பாரதியை பார்க்க செல்கிறார்கள்.
பாரதி இன்னும் சுயநினைவின்றியே படுத்திருக்க குழந்தைகள் அவருக்கு விபூதி வைத்து விடுகிறார்கள். கண்ணம்மா விபூதி வைக்க மறுத்து விடுகிறார். பின்னர் குழந்தைகளுக்கு கூப்பிட்டு விட்டு செல்கிறார். கண்ணம்மா தனிமையில் யோசித்துக் கொண்டிருக்க தாமரை இது காதல் தானே என்று கேட்டால், காதல் இல்லை அதே சமயத்தில் அக்கறை இருக்கிறது என கூறுகிறார்.
ஒரு புது நரம்பியல் நிபுணர் பாரதியை பார்க்க அடுத்த நாள் வருகிறார். அவர் பாரதியை பார்க்கும் பொழுது மெல்ல பாரதி கண்விழிக்கிறார். அவர் சுயநினைவிற்கு திரும்புகிறார்
ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக அவருக்கு அங்கு இருக்கும் யாரையும், சௌந்தர்யா அகிலன் உட்பட, அடையாளம் தெரியவில்லை.