Barathi Kannamma Today episode | 20.01.2023 Review | Vijay Tv
Barathi Kannamma memory loss storyline
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று பாரதிக்கு தலையில் அடிபட்டதால் கண்ணமாவையும் அடையாளம் தெரியவில்லை. பின்னர் டாக்டர் ஆழ் மனதில் பாரதிக்கு கண்ணம்மாவின் பெயர் மட்டுமே நினைவில் இருப்பதாக கூறி கண்ணம்மாவை பாரதிக்காக பாரதியுடன் நேரம் செலவழிக்க கூறுகிறார். பழைய நினைவுகளை அவருக்கு நினைவில் வரும்படி காதலோடும் பாசத்தோடும் பாரதியிடம் நடக்குமாறு கூற கண்ணம்மா கோபப்படுகிறார். தன்னால் இது இயலாது என அவர் குழந்தைகளை கூப்பிட்டு செல்கிறார்.
சௌந்தர்யாவையும் அடையாளம் தெரியாததால் பாரதி புலம்புகிறார். பின்னர், தனது குடும்பத்தினரை டாக்டர் அறிமுகம் செய்து வைக்க, அவர்களோடு சேர்ந்து கிராமத்திற்கு செல்கிறார். அங்கே கிராமத்தில் இருப்பவர்கள் பாரதியின் நிலை கண்டு வருந்துகிறார்கள். கண்ணம்மா வீட்டு வாசலில் இருந்து அனைத்தையும் பார்ப்பதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.