வெறுப்பேற்றிய பாரதி! Barathi Kannamma today episode 23.09.2021 update
Bharathi Kannamma Arun Roshni
பாரதிகண்ணம்மா சீரியல் இன்று கண்ணம்மாவை நினைத்து மனம் வாடுவதாகவும் தான் செய்தது தவறு என்றும் உணர்ந்ததாக நேற்று கூறிய பாரதி, இன்று அதெல்லாம் நடிப்பு எனக்கூறி சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரை வெறுப்பேற்றுகிறார். எந்த ஜென்மத்திலும் கண்ணம்மா உடன் சேர மாட்டேன் என கூறுகிறார்.
பின்னர் ல், லக்ஷ்மியின் கேள்விகளுக்கு எப்பொழுதும்போல் பதிலளிக்க முடியாத கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை எண்ணி வருத்தப்படுகிறார். வெண்பாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க செல்கிறார். கண்ணம்மா குமார் அண்ணன் உடன் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, அதே சமயத்தில் வெண்பா கண்ணம்மாவை போனில் அழைக்கிறார். அதை எடுத்து பேசிய லட்சுமி தனது தாய் எங்கு சென்றிருக்கிறார் என்பதை கூறிவிடுகிறார்.
திகைத்துப்போன வெண்பா மீண்டும் சாந்தியின் ஆலோசனையின்பேரில் குமார் அண்ணனுக்கு போனில் அழைத்து, கண்ணம்மாவிடம் பேசுகிறார். ஏதோ ஒரு குழந்தையை அழுவது போல் நடிக்க சொல்லி, அதுதான் கண்ணம்மாவின் குழந்தை எனக் கூறி பயமுறுத்துகிறார். கண்ணம்மா அழுதுகொண்டே புகார் அளிக்காமல் வீட்டிற்கு வருகிறார். தனது நிலையை எண்ணி உடைந்து போகிறார்.