வேதனையில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 24.09.2021 review
Barathi Kannamma Soundarya
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள். சாந்தி கண்ணம்மாவை அடிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசையை கூற, வெண்பா அதையும் நிறைவேற்றி விடலாம் என கூறுகிறார். பின்னர், அவர் கண்ணம்மா கண்டிப்பாக வீட்டில் அழுது கொண்டு அல்லது கோவிலில் அழுது கொண்டுதான் இருப்பார் என கூறுகிறார்.
அதேபோல் கண்ணம்மாவும் கோவிலில் அழுதுகொண்டிருக்கிறார். பிறகு அங்கப்பிரதட்சணம் செய்கிறார். அப்பொழுது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனது கஷ்டங்களை கூறிக் கொண்டிருக்கிறார். கோயிலில் சகுனம் சரியில்லாததால் நடை சாத்தி விட்டதாகவும், இப்பொழுது அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டாம் எனவும் பூசாரி கூறுகிறார். இதைக் கேட்டு மேலும் வருத்தமடையும் கண்ணம்மா தனது காணாமல் போன குழந்தையை பற்றி புலம்புகிறார். ஆனால், அதே சமயத்தில் வெண்பாவை பற்றி எந்த உண்மையையும் சௌந்தர்யாவிடம் அவர் கூறவில்லை. சௌந்தர்யா கண்ணமாவிற்கு ஆறுதல் கூறி திரும்புகிறார்.
வீட்டில் ஹேமா கண்ணம்மாவை பற்றி பேசியதற்கு கோபப்பட்டு பாரதி செல்கிறார். வேணுவும் சௌந்தர்யாவும் நடந்தவை குறித்து வருத்தம் அடைகிறார்கள். கண்ணம்மாவுக்கு ஏதோ பிரச்சினை இருப்பதாகவும் அதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் சௌந்தர்யா கூறுகிறார். கடைசியாக லட்சுமி தன் அம்மா கண் அம்மாவிற்கு கால் அமுக்கி விடுவதுடன் எபிசோடு முடிவடைகிறது.