பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மாவின் அப்பா லட்சுமியிடம் உண்மையை மறைத்து மழுப்பி, லட்சுமியை தன்னை தாத்தா என்று அழைக்க சொல்லி விரும்பி கேட்டுக் கொள்கிறார். லட்சுமியும் அதற்கு யோசனைக்கு பிறகு தாத்தா என்று அழைக்கிறார்.

வெண்பா அஞ்சலியிடம் பாரதி தந்ததாகக் கூறி போலியான விஷ மாத்திரைகளை கொடுக்கிறார். லக்ஷ்மி தன் தாய் தன்னை பொய் சொல்ல வைத்தது எண்ணி வருத்தப் படும் அதே நேரத்தில் பாரதி கண்ணம்மா குறித்தும் கண்ணம்மா லட்சுமியை அழைத்துச்செல்ல ஏன் வரவில்லை என்பது குறித்தும் யோசிக்கிறார்.

கடைசியாக பாரதி லட்சுமியிடம் அவரது அப்பாவைப் பற்றி கேட்க லக்ஷ்மி பாரதியிடம் ஹேமாவின் அம்மாவைப்பற்றி கேட்க இருவரும் ஒழுங்கான பதில் கூறாமல் அதே சமயத்தில் பாரதி கண்ணம்மாவை பற்றி தவறாக நினைப்பதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

About Author