வெண்பா vs கண்ணம்மா! Barathi Kannamma today episode 25.09.2021 review
Barathi Kannamma Venba Face off
பாரதிகண்ணம்மா சீரியல் இன்று. அஞ்சலி வெண்பா கொடுத்த விஷ மாத்திரை போடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் இந்த மாத்திரைகளை கொடுத்தது பாரதி என கூறுகிறார். பின்னர் இந்த மாத்திரைகளை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள சொன்னது வெண்பா தான் என கூறுகிறார். அதைக்கேட்டு கோபமாகும் சௌந்தர்யா பாரதி கொடுத்த அளவிலேயே எடுத்துக்கொள்ள சொல்கிறார். ஆனாலும் அஞ்சலிக்கு இருதய வலி ஏற்படுகிறது.
பின்னர், தனக்கு போன் செய்யாததை எண்ணி கோபப்படும் வெண்பா கண்ணம்மாவிற்கு மிரட்டி ஒரு வாய்ஸ் நோட்டை அனுப்புகிறார். அதைப் பார்த்துவிட்டு பதறும் கண்ணம்மா திருப்பி வெண்பாவை அழைக்க முயற்சிக்கிறார். ஆனால் வெண்பா அந்த அழைப்பை வேண்டுமென்றே தவிர்க்கிறார்.
ஒருவழியாக கோபம் கொள்ளும் கண்ணம்மா வெண்பாவின் வீட்டிற்கு நேராக செல்கிறார். அங்கு வெண்பாவின் கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறார். வெண்பாவோ மீண்டும் அவரது அடியாளை வைத்து கண்ணம்மாவை மூளைச்சலவை செய்கிறார். கண்ணம்மாவும் குழம்பிப்போய் வெண்பாவின் புது ஆசையான பாரதி கண்ணம்மா விவாகரத்திற்கு மனதளவில் தயாராகிறார்.