நெகிழ வைத்த அஞ்சலி – Barathi Kannamma today episode 25.10.2021 update
Barathi Kannamma Anjali distraught
பாரதிகண்ணம்மா சீரியல் இன்று தன் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தூங்கிக்கொண்டிருக்கும் கண்ணம்மா வெண்பாவின் நினைவில் விழிக்கிறார். வெண்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுமென்றே மாற்றி மாற்றி பேசி வெறுப்பேற்றுகிறார்.
அடுத்த நாள், ஒரு புகைப்பட கலைஞரை அழைத்து வந்து, கண்ணம்மா குழந்தைகளோடு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். ஹேமாவும் லட்சுமியும் அடிக்கடி பொறாமை கொண்டு சண்டை போடுகிறார்கள்.
ஹேமாவின் நினைவு மிகவும் வாட்ட பாரதி அனைத்து வேலைகளையும் பாதியில் நிறுத்திவிட்டு ஹேமாவை பார்க்க விரைகிறார். அஞ்சலியை பார்க்க ஒரு நாட்டு மருந்து வைத்தியம் பார்க்கும் பாட்டி வருகிறார். அவரிடம் உண்மைகளைக் கூறி அஞ்சலி அழுகிறார். அவரோ சில மருந்துகளை கொடுத்து தினமும் உண்ண சொல்கிறார்.