Barathi Kannamma today episode 27.11.2021 review
Barathi Kannamma Happy twist
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி கண்ணம்மாவோடு ஆறு மாதம் சேர்ந்து வாழப் போவதாக கூறியதைக் கேட்டதும் சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர், பாரதி தெளிவாக தான் கண்ணம்மாவின் வீட்டிற்குப் போய் தங்கப் போவதாக கூறுகிறார். இதை கண்ணம்மாவின் தெரிவிக்க சௌந்தர்யா போனில் அழைக்கிறார்.
கண்ணம்மா லட்சுமியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் வெண்பா பாரதிக்கு தொலைபேசியில் அழைக்க, பாரதி அஞ்சலியை பற்றியும் வெண்பா செய்த துரோகத்தையும் குற்றத்தைப் பற்றியும் கோபமாகப் பேசி இனி நாம் இருவருக்குள் எந்த நட்பும் கிடையாது எனக் கூறி அழைப்பை துண்டிக்கிறார்.
பின்னர், கண்ணம்மா தன்னை அழகு படுத்தி கிளம்புகிறார். வேணு சௌந்தர்யா பாரதியின் முடிவைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, பாரதி தனது பைகளை எடுத்து வந்து கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார்.