Barathi Kannamma today episode 31.08.2021 review
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி தன் ஆதங்கத்தை சௌந்தர்யா வேணு மற்றும் அஞ்சலியிடம் கூறிப் புலம்புகிறார். மிகவும் நெகிழ்ச்சியாக பேசுகிறார். சௌந்தர்யா தலைகுனிந்து காணப்படுகிறார்.
பின்னர், லட்சுமி கண்ணம்மாவை கேள்விகளால் துளைக்க, கண்ணம்மாவுக்கு பதிலே இல்லாமல் தலையில் கைவைத்தபடி உட்காருகிறார். லட்சுமியும் போனால் போகுது என்று மன்னித்துவிடுகிறார். வேணுவும் சௌந்தர்யாவும் இரட்டைக் குழந்தைகளைப் பற்றி இப்போதைக்கு கேட்காதது எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும் உள்ளூர பயப்படுகிறார்கள்.
கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் அஞ்சலியின் வளைகாப்புக்கு கண்ணம்மாவை அழைக்க, மிகுந்த யோசனைக்குப் பிறகு கண்ணம்மா அதற்கு ஒத்துக் கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்