பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 2 | கமலுக்கு முன் அரங்கேறும் ஹவுஸ்மேட்ஸ் பஞ்சாயத்து!
Bigg Boss 5 Tamil Day 13 Promo 2 Is Out Now
பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
தலைவர் பதவிக்கான பலூன் உடைக்கும் போட்டியில் கடைசியில் போட்டி போட்ட சின்ன பொண்ணு அக்கா, தாமரை நடுவே சின்ன சல சலப்பு ஏற்பட்டது. அது பஞ்சாயத்து பேசும் அளவிற்கு பெரிதான சல சலப்பு அல்ல. ஆனாலும் கமலின் முன் அரங்கேறி இருக்கிறது அந்த பஞ்சாயத்து. அது தான் புரோமோ 2.
”ஹைலைட்ஸ்: ஏதாச்சு பிரச்சினை ஹவுஸ்குள்ள வரும். அத அவங்களாவே சரி பண்ணிப்பாங்க. ஆனாலும் நாங்க விட மாட்டோம். அப்பிடிங்கிற மாறி தான் இருக்கு இந்த பஞ்சாயத்து. பிரச்சினை அணைஞ்சி நாலு நாள் ஆச்சி, ஆனாலும் அத ஊதி மறுபடியும் தக தகன்னு எரிய வைக்கிறாங்க இந்த பிக்பாஸ்”