பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Review | ’ராஜூவுக்கு மைன்ட் வாய்சில் பேசத் தெரியாது போல, எதுவாக இருந்தாலும் சத்தமா பேசிடுறாரு’

Bigg Boss 5 Tamil Day 13 Full Review

Bigg Boss 5 Tamil Day 13 Full Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான காட்சிகள் அனைத்தும், எழுத்து வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வாசித்து காட்சிகளை எழுத்துக்கள் மூலம் கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.

12 ஆம் நாள் நள்ளிரவில் இருந்தே துவங்குகிறது, பதிமூன்றாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சின்ன சின்ன மனஸ்தாபங்கள் சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். சாதாரணமாய் நம் வீட்டிலும் சரி உறவினர்களுக்குள்ளும் சரி, பெரியவர்கள், தம்மை அறியாமலே, நம்மால் மதிக்கப்படாத சூழலை அவர்கள் உணர்ந்தால், குழந்தை போல கோபித்துக் கொள்வதுண்டு. அது போல தான் சின்ன பொண்ணு அம்மாவிற்கும் உருவானது அந்த மனஸ்தாபம். அதை அமைதியாகவே தீர்த்து இருக்கலாம். ஆனால் அதை அபிஷேக், சின்ன பொண்ணு அம்மாவிடம் எடுத்துச் சொல்வதாக நினைத்து, ’ஆத்தா… ஆத்தா’ என்று குரல் கனக்க கத்தி நியாயத்தை எடுத்துரைத்தது மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு எரிச்சலை தான் வரவழைத்தது. நியாயமாக அவர் பேச வேண்டுமெனில் சின்ன பொண்ணு அம்மாவிடம், அதை அமைதியான முறையிலேயே வெளிப்படுத்தி இருக்கலாம். எதற்கு அந்த கனத்த குரல் என்பது தான் புரியாத ஒன்று.

’டாஸ்க்ல ஏதோ தப்பு நடக்குது. அது என்னனு மட்டும் தெரியட்டும். எப்புடி கதகளி ஆடுறேன்னு பாருங்க’, ‘நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல, அப்புடி நான் ஆரம்பிச்சா இங்க ஒரு பைய உள்ள இருக்க மாட்டான், எல்லாவனும் வீட்டுக்கு வெளில தான்’
இதெல்லாம் சினிமா பையனோட வெறித்தனமான டையலாக்குகள், ரிவ்யூ பண்றதுக்காக நெறய பால கிருஷ்ணா சார் படம் பார்த்திருப்பாரு போல. சீரியசா பேச வேண்டிய இடத்துலலாம் பால கிருஷ்ணா சார் மாறி, அவர அவரே புகழ்ந்து பஞ்ச் டையலாக் விட்டுட்டு இருக்காரு. மறுபடியும் அபிஷேக், பவ்னி, அக்‌ஷாரா கமிட்டியோட ஜொலித்தவர் , ஜொலிக்காதவர் டிஸ்கசன் போகுது. ராஜூவ ஹவுஸ்மேட்ஸ் பெரும்பாலானோர் ஜொலித்தவர்னு சொன்னாலும் கூட அத அபிஷேக்குக்கு ஏத்துக்குற பக்குவம் இல்ல. அவருக்கு அந்த ஒப்பினியன் சம்மந்தமா ஏதாச்சு வயிறு பிரச்சினை இருக்க கூடும் போல. சரி அத விட்ருவோம். எல்லாரும் கொளுத்தி போட்டு விளையாடுற இந்த கேம் பவ்னிக்கு புரியல போல. மதுக்கிட்ட வந்து ஒவ்வொரு தடவையும் தன்னோட பயத்த வெளிப்படுத்திக்கிட்டே இருக்காங்க பவ்னி. ’மாத்தி மாத்தி கொளுத்தி போடுறதும், கொளுந்து விட்டு எரியுற அந்த அனலுக்கு மேல பிக்பாஸ் ஒரு டேங்க் பெட்ரோல ஊத்துறதும் தான் இந்த கேம்னு’ என்னிக்கு புரிஞ்சிப்பாங்க நம்ம பவ்னி.

இருந்தாலும் ராஜூவின் ஹியூமர் ’அட்ரா சக்க’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது, ஹவுஸ்குள்ள ஒவ்வொருத்தரும் என்ன என்ன பண்னுவாங்கன்னு முன்னாடியே எல்லாம் ஸ்கிரிப்ட் மாறி படிச்சிட்டே வந்திருப்பாரு போல. அப்புடியே ஒப்பிக்கிறாரு. ’ஏதோ எனக்குள்ள புகைஞ்சுகிட்டே இருக்கு மச்சான்னு’ ஆக்ரோசமா அபிஷேக் சொல்ல ‘குளிச்சியா’ன்னு ஒத்த வார்த்தைய சொல்லி அபிஷேக்க ஆஃப் பண்ணிட்டாரு நம்ம ராஜு. பிரியங்காகிட்ட, அபிஷேக் கதகளி ஆட போறேன்னு சொன்னாரு, ராஜுகிட்ட பரதநாட்டியம் ஆட போறேன்னு சொல்லி இருக்காரு. கடைசியா ஏதோ டேன்ஸ் மாஸ்டர இன்டர்வியூ எடுத்துட்டு பாதிலயே உள்ள வந்திருப்பாரோ நம்ம அபிஷேக். ஏற்கனவே பாடுன பாட்டே இன்னும் வைரலாகி முடில. இதுல கதகளி, பரத நாட்டியம் வேறயா? தாங்க முடியாதுடா ஆண்டவா…!

மெசேஞ்சர்ல இப்ப எதாச்சு ஒரு பொண்ணுக்கு ‘ஹாய்’ அனுப்புறோம். அந்த பொண்ணு ‘ஹாய் ப்ரோ’ன்னு அனுப்புதுன்னு வச்சிப்போம். ’ப்ரோன்னு சொல்லாதீங்க சும்மா நேம் சொல்லியே கூப்பிடுங்க’ன்னு சொல்லுவோம். இதே மாறி தான் பவ்னிக்கும் அபினய்க்கும் இடைல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு. பவ்னி சாரியோட அந்த பஞ்சாயத்து முடிச்சிக்கிட்டுன்னே வச்சிக்குவோம். இன்னொன்னு இருக்கு இதே மெசேஞ்சர்ல, ‘ப்ரோன்னு சொல்லாதீங்க நேம் சொல்லி கூப்பிடுங்க’ன்னு சொல்றவங்கள விட ஓரளவுக்கு நம்பலாம், ’அக்கா, சிஸ்டர்’னு சொல்லி மெசேஞ்சர்ல பேசுறவங்க கிட்ட உஷாரா இருக்கனும்னு சொல்லுவாங்க, அது பவ்னிக்கு புரிஞ்சா சரி.

அதற்கு அப்புறம் கமல் சார் என்ட்ரி, எப்போதும் போல அகம் டிவி வழியே அகத்திற்குள், கமல் சார் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்கு இடையேயான உரையாடல்,விவாதம் தொடங்க ஆரம்பிக்குது. இந்த வார தலைவரான தாமரை பற்றிய கருத்துக்கள் ஹவுஸ்மேட்சிடம் கேட்கப்படுகிறது. ’அன்பு தொணிந்த மிரட்டலோடு அனைவரையும் பங்கெடுக்க வைத்து, தானும் எல்லா வேலையிலும் பங்கெடுத்து புரியாததை கேட்டு அறிந்து, சிறப்பாகவே தாமரை செயல்பட்டார்’ என்பது பெரும்பாலானோரின் கருத்து. பலூன் உடைக்கும் போட்டியில் நடந்த சலசலப்பு பற்றிய விவாதம் கொஞ்ச நேரம் நீளுகிறது. ’அபினய் விதி மீறலுக்கு உட்பட்டாலும் , இயாக்கி ரூல்ஸ்களை வாசித்து காட்டிய போது பின் வாங்கி விட்டார் என்று அந்த பஞ்சாயத்து, அபினய் பக்கமாகவே நியாயத்தில் போய் முடிந்தது’. தாமரை-சின்ன பொண்ணு அம்மாவின் பஞ்சாயத்தும் அத்தோடு பேசி முடிக்கப்பட்டது.

அடுத்ததாக ஒவ்வொருவரின் கதையை பற்றின வார்த்தைகளை எடுத்துரைக்கிறார் கமல் அவர்கள். முதலாவதாக தாமரையின் கதை குறித்த, ஏற்ற இறக்கம், பிரிவு, அவர் அனுபவித்த கஷ்டம், நாடகக் கலையில் பங்கு, பிள்ளையுடனான பிரிவு யாவற்றையும் கூறி நெகிழ்ந்தார் கமல் அவர்கள், அதற்கு பின் அக்‌ஷாராவின் கதை-யில், அப்பாவின் இழப்பு, அதற்கு பின் அண்ணனே அப்பாவாக, என்று அவரின் வாழ்வியல் நிகழ்வுகளை கலப்படமின்று கூறிய விதம் பிடித்ததாக கூறி முடித்தார் கமல் அவர்கள். பிரியங்காவின் கதை-யில், ’ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் ஒரு ரயிலில் ஒரு மனிதனுக்கு உதவ ஒருவரும் இல்லையே , அப்படி எவரேனும் ஒருவர் உதவி இருந்தால் கூட அவர் அப்பா இருந்திருக்க கூடுமோ’, என்ற கருத்தை மையத்தில் வைத்து, ஒருவருக்கு உதவி என்னும் போது உதவாதவர்கள் மனிதமாய் இருந்து பயனில்லை என்ற மொழிச்சொல்லுடன் முடிக்கிறார் கமல் அவர்கள். அதற்கு பின் ராஜூவின் கதையும், கதை சொன்ன விதமும் மிகவும் பிடித்திருந்ததாகவே ஒப்புதல் அளித்து ’இனிமேல் ராஜுவின் கதை வேற கதையாகவும் மாறும்’ என்று பாராட்டுதலையும் அளித்தார் கமல் அவர்கள்.

அக்‌ஷாராவின் கதைக்கு ராஜுவின் லைக், பிரியங்காவின் கதைக்கு ராஜூவின் டிஸ்லைக் குறித்து கமல் கேட்ட போது, ’கதைய விட இவள (அக்‌ஷாரா) பிடிக்கும் சார்’னு சொன்னாரு பாருங்க. இவ்ளோ ஓபனா யாரும் சொன்னது இல்ல. வெளிப்படையா பேசிடுவோம் நடக்குறது நடக்கட்டும்னு ஒரு சிலருக்கு தான் இந்த அளவுக்கு ஓப்பனா பேசுற தைரியம் இருக்கும். இது கூட பரவால்ல பிரியங்கா கிட்ட பேசுனதுக்கப்புறம் ஒரு தெளிவு வந்திச்சு ‘ஒரு வேள நாம அவ சொல்ற மாதிரி தான், கதைக்கு காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்றமோன்னு தோனிச்சு’ன்னு சைடு கேப்ல அபிஷேக்குக்கு ஒரு குட்டு வச்சாரு பாருங்க, அந்த கலாய், ஹவுஸ்மேட்ஸ்க்கு புரிஞ்சுதோ இல்லையோ, அபிஷேக்குக்கும் அத பாக்குற ரசிகர்களாகிய நமக்கும் நல்லாவே புரிஞ்சிருக்கும். இந்த பிரியங்கா, அக்‌ஷாரா, ராஜு இந்த மூணு பேருக்கும் இடைல இருக்குற இந்த மேட்டர வச்சு ஏதோ திட்ட போற மாறி, அட்வைஸ் பண்ண போற மாறி பாவனைய கொண்டு வந்து ’நீங்க மூணு பேரும் Saved’னு சொன்னாரு பாருங்க.ஹப்பா…..! அது அந்த மூணு பேருக்கும் ஒரு பீல் கொடுத்து இருக்கும். ஒரு சிலர் ஆடியன்சா அவரு Savedனு சொல்றத எதிர்பார்த்திருக்கலாம். ஆனாலும் அவரோட முகபாவனைய ஏதோ கோபமா சொல்ற மாறி காட்டிக்கிட்டு, Savedனு சொன்னாரு பாருங்க உண்மைலயே நாம ஹவுஸ்குள்ள அவங்க இடத்துல இருந்திருந்தா நமக்கும் அள்ளு விட்ருக்கும்.

அதற்கப்புறம் கமல்சார் இடைவெளி விடவும், ஒரு பக்கம் பவ்னி அழுதுக்கிட்டு இருக்க, எல்லாரும் என்னாச்சு ஏதாச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்க, ’போய் கேளுங்க’ன்னு பாதி வாயால சொல்லிட்டு பாதி வாய்ல ஒரு சம்சாவ விழுங்கிட்டே நின்னாரு பாருங்க ராஜு, அதாவது ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்’ங்கிற மாறி இது இந்த ஹவுஸ் இப்படி தான் இருக்கும். நாம இப்புடியே இருந்துட்டு போயிடுவோம்னு, என்ன நடந்தாலும் அசால்ட்டா இருக்குற ராஜூ, உண்மைலயே செம்ம கெத்து தாங்க. மறுபடியும் கமல் சாருடனா அகம் டிவி வழியான உரையாடல் ஆரம்பிக்குது. இசைவாணியோட இரண்டு வார பயணத்த பத்தின கேள்விகள் எழுப்பப்படுது. அவர் சார்புல அவர எல்லாரும் ஒதுக்குற மாறி பீல் இருக்குறதா விடைய முன் வைக்கிறாங்க. ஆனா அத மற்ற ஹவுஸ்மேட்ஸ் அத தகுந்த காரணம் சொல்லி மறுக்குறாங்க. அதாவது ’யாரும் ஒதுக்கல, அவங்க ஒதுங்கி இருக்குற மாறி பீல் தான் எங்களுக்கு இருக்கு’ அப்புடிங்கிற மாறி மத்தவங்க சொல்றாங்க. ’ஏதோ ஒதுக்குற மாறி நினைச்சிக்குறது, அது அவங்களோட ஓப்பினியனாவே இருக்கட்டும், அவங்களோட அந்த ஒப்பினியன நீங்க எல்லாரும் சேர்ந்து மாத்துங்க, அந்த பொறுப்பு நம்மளுக்கு இருக்குன்னு’ சொல்லி அந்த பஞ்சாயத்த முடிச்சி வைக்கிறார் கமல் அவர்கள்.

அதற்கு அப்புறம் நிரூப் அவர்களின் கதையோட சுவாரஸ்யங்களையும், அதில் இருக்கும் அழுத்தங்களையும் கமல் அவர்கள் சொல்லி முடித்து விட்டு, ஏதோ நிரூப், அண்ணாச்சி அவர்களை இணைத்து பேசுவது போல வந்து, இருவரும் Savedனு சொல்லி அந்த வாக்கியத்தை முடிக்கிறார் கமல். ’வாத்தியாரே…! ஒரு பேய் கதைய ஒரு தடவ சொன்னா தான் பயம் வரும், இரண்டாவது டைமும் அதே கதைய சொன்னா பயம் வராது வாத்தியாரே. அதுனால இது மாறிலா எப்பவாச்சு ஒரு தடவ மட்டும் ட்ரை பண்ணுங்க வாத்தியாரே’ அதற்கு அப்புறம் பவ்னி – அக்‌ஷாராவோட பஞ்சாயத்து கொஞ்ச நேரம் ஓடுது. ஹ்ம்கும் சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் மட்டும் இந்த பிக்பாஸ் ஷோவோட நேம பஞ்சாயத்து ஷோ-ன்னு மாத்திக்கலாம் போல. ஏன்னா இந்த ரெண்டு நாள் மட்டும் பிக்பாஸ்குள்ள அவ்ளோ பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு. அதற்கப்புறம் மீதி இருக்கும் 10 பேரையும் இருவர் குழுவாக பிரிக்கிறார் கமல் அவர்கள், அதாவது சின்ன பொண்ணு-இசைவாணி, சிபி-வருண், நாடியா-அபினய், இயாக்கி-அபிஷேக், மதுமிதா-சுருதி என்று ஐந்து குழுவாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் முதலில் காப்பற்றப்படுவார் என அறிவிக்கிறார்.

முதலில் இசைவாணி-சின்னபொண்ணு அக்கா குழுவில் இசை காப்பாற்றப்படுகிறார். மதுமிதா-சுருதி குழுவில் சுருதி காப்பாற்றப்படுகிறார். சிபி-வருண் குழுவில் சிபி காப்பாற்றப்படுகிறார். அபிஷேக்-இயாக்கி குழுவில் இயாக்கி காப்பாற்றப்படுகிறார். அபினய்-நாடியா குழுவில் அபினய் காப்பாற்றப்படுகிறார். தற்போது மீதி இருப்பவர்கள் சின்ன பொண்ணு, மதுமிதா, வருண், அபிஷேக், நாடியா என்ற ஐந்து பேர். இந்த ஐவரில் ஒருவர் வெளியேறப்போகிறார் என அறிவித்தார் கமல் அவர்கள். உள்ளே திக்-திக் நிமிடங்கள் பற்றிக் கொண்டது. அதே சூட்டோட ’அதற்கான விடையை நாளை சொல்கிறேன்னு’ அந்த ‘திக்-திக்’க நமக்குள்ளும் விதைச்சுட்டு கிளம்பிட்டாரு ஆண்டவர். அப்போ நாளைக்கு வரைக்கும் பிக்பாஸ் ஹவுஸ், தக தகன்னு எரிஞ்சுகிட்டும் புகைஞ்சுகிட்டும் தான் இருக்கும்.

“ ஹைலைட்ஸ்: ’பெருசா எதுவும் இல்லாத விஷயத்துக்கெல்லாம், எந்த ரியாக்டுமே காட்டிக்காம அப்புடியே விட்றனும். இது தான் இன்றைய எபிசோடுல ராஜூ கிட்ட இருந்து நமக்கு கிடைக்கிற பாடம். இன்னொன்னு ‘தற்பெருமை பேசி பேசியே, நம்மள நாமலே அடுத்தவங்க கிட்ட உயர்த்தி காட்டுறதா நினைச்சு, தாழ்ந்துட கூடாது’, இது அபிஷேக் நமக்கு கத்துக்கொடுக்குற பாடம் “

About Author