பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Promo 3 | நீ மிகப்பெரிய புத்திசாலி மாதிரிலா பேசாத தம்பி!
பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
’என்னா பீலிங்க்ஸ்சு’ டாஸ்க்கின் கீழ், அபிஷேக் மற்றும் வருண் இணைந்து இசை மற்றும் பவ்னியின் பெர்சனல் விஷயங்களை சொல்லி அவர்களை அழ வைக்க முயல்வதாக தெரிகிறது. அண்ணாச்சி அதை பேசி அவர்களை அழ வைக்க வேண்டாம் என்று விவாதம் செய்ய முயற்சிக்கிறார். சண்டை முற்றுகிறது. இதுவே புரோமோ 3.
” ஹைலைட்ஸ்: ஒருவரை அழ வைப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் கோபப்பட வைக்கவும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. அவரது வாழ்க்கையின் நடந்த துயரங்களையே கிளறி நியாபகப்படுத்தி தான் அழ வைக்க வேண்டுமா என்ற அண்ணாச்சியின் கேள்வி நியாயமானது. அபிஷேக்கின் ஓங்கிய குரல் நியாயமற்றது “