பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Review | ‘டாக்டிக்ஸ் என்ற பெயரில், மற்றவர்களின் தனித்துவத்திற்கு திரையிடுகிறாரா அபிஷேக்?’
பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.
பதினேழாம் நாள் இரவு 8 மணி, ‘அக்ஷாரா கன்பசன் ரூம்க்கு வாங்க’ என்ற பிக்பாஸ்சின் குரலுடன் துவங்குகிறது இன்றைய எபிசோடு. ‘எப்படி இருக்கீங்க அக்ஷாரா’ என்று பிக்பாஸ் கேட்கவுமே, அழுகையுடன் பேசத் துவங்குகிறார் அக்ஷாரா. ‘பொதுவாகவே எனக்கு சத்தம் போட்டு பேசத் தெரியாது. என்கிட்ட யாரும் சத்தம் போட்டு பேசினாலும் அழுதிடுவேன் பிரியங்கா, அபிஷேக், நிரூப் எல்லாம் என்கிட்ட வந்து, வாய்ச உயர்த்துறப்போ அவங்களுக்கு ஈகுவலா என்னால பேச முடில. ஏன் நான் அவங்கள மாறி இருக்கனும்னு நினைக்கிறாங்க?. நான் மது ரொம்ப இன்னொசண்ட்ங்கிறதுனால அவளுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணேன் அவ்ளோ தான். ஆனா அத குறி வச்சு என்ன ரொம்ப தாக்குறாங்க. என்னால இங்க சுத்தமா நானா இருக்க முடில. எனக்கு வீட்டுக்கு போனும். என்கிட்ட இவ்ளோத்துக்கும் நாணயமே இல்ல. ஆனா என்கிட்ட இருக்குறத மட்டும் பறிக்கனும்னு பேசிக்கிறாங்களே? நினைக்கிறாங்களே ஏன்? அது ஏன் என்கிட்ட மட்டும்? மத்தவங்க மாதிரி எனக்கு உறுதியான கதையும், கடந்து வந்த பாதையும் இல்ல. நான் அவ்ளோ என் வாழ்க்கைல கஷ்டப்படலங்கிறதுனால, மற்ற போட்டியாளர்களுக்கு என் மேல இஷ்டமே இல்ல. என்னால கடந்த காலத்த மாத்த முடியாது. என் அண்ணனையோ என் அம்மாவையோ என்னால எப்புடி மாத்த முடியும்? எல்லாருக்கும் நம்மள பிடிக்கனும்னா நாம பாஸ்ட்ல ரொம்ப கஸ்டப்பட்டிருக்கனுமா? அப்புடி இருந்தா தான் இங்க உள்ளவங்களுக்கு என்ன பிடிக்குமா? என்று தன் மனதில் உள்ளவை யாவற்றையும் அழுது கொட்டி தீர்த்தார் அக்ஷாரா. அவர் சொல்லும் ஒவ்வொரு வரியிலும் நிச்சயம் உண்மை இருந்தது. ‘நீங்க இப்படியே நீங்களாவே இருங்க, நல்லாவே விளையாடுறீங்க, கொஞ்ச நாள் இந்த வீட்ல இருங்க, நீங்க தேடுற வழி உங்களுக்கு கிடைக்கும்’னு பிக்பாஸ் அவரோட ஆறுதல சொல்லி முடிக்கிறார். நன்றினு சொல்லிட்டு அக்ஷாராவும் வெளில வந்துடுறாங்க.
அடுத்ததாக நிரூப்-அபிஷேக்-பிரியங்கா கூட்டணியின் உரையாடல் துவங்குகிறது. முதல் வாரம் சிரிப்பை மட்டுமே விதைத்த பிரியங்கா, இப்போதெல்லாம் முழு நேரமும் போட்டியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருக்கிறார். ‘டாப் 3 போற வரைக்கும் நிரூப் தான் எல்லா டாஸ்க்லயும் ஜெயிக்கனும்’னு அபிஷேக் சொல்லிட்டு இருக்காரு. அபிஷேக்க பாக்குறப்போலாம் வடிவேலுவோட சீட்டுக் கட்டு காமெடி தான் நியாபகம் தான் வருது. ‘அத போடாதய்யா.. அத ஏன் போடுற.. இத எடுத்து போடு’ என்று டாக்டிக்ஸ் சொல்லி தருவதாக சொல்லி தன் குழுவை மொத்தமாய் குழியில் தள்ளி விடுவார் போல. அவரது ப்ளேன் முழுக்க அப்படித் தான் இருக்கிறது. ’இந்த டாஸ்க்கோட முடிவுல, இந்த மூனு (நிரூப், பிரியங்கா, அபிஷேக்) பேரும்ம் செம்ம பவர் புல், அப்புடின்னு ஒத்துக்கிட்டு மொத்த வீடும் நம்ம கூட வந்து ஜாய்ன் பண்ணனும். அவ்ளோ தான் பினிஷ், டன்’ என்று சொல்கிறார் பிரியங்கா. ஏம்மா டாஸ்க் முடியுறது அப்புறம் இருக்கட்டும். இந்த வீக் முடியுற வரைக்கும் உங்க குழு இருக்கான்னு பாருங்க. வோட்டிங் வேற போய்கிட்டு இருக்கு. யாரையாச்சு தூக்கி வெளில போட்டுற போறாங்க. ’ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஒத்துக்காது மேடம்’. அத்துடன் அந்த உரையாடல் காட்சி அகல்கிறது. அடுத்தாக அபினய்-அக்ஷாரா உரையாடல் துவங்குகிறது. ’ஒரு சின்ன பிரச்சினையை பெருசாக்கி, பயங்கரமா கொண்டு வந்து ஒரு பஞ்சாயத்து மாறி வைக்கிறாங்களா அது என்னால ஏத்துக்க முடில’ என்று தனக்கு நடந்தவைகளை அபினய்யிடம் சொல்லி வருத்தப்படுகிறார் அக்ஷாரா. அவங்க வேற யாரையும் பத்தி சொல்லல, நம்ம அபிஷேக் & அன்கோவ பத்தி தான் சொல்றாங்க போல. சின்ன தீப்பொறி கிடக்குதுன்னு வச்சிக்குவோம். அது அதுவாவே அணைஞ்சிடும். ஆனா அணைய விட மாட்டாங்க, அத ஊதி ஊதி நெருப்ப பெருசாக்கி வீட்டயே கொளுத்திடுறாங்க. இத தான் அக்ஷாரா அபினய் கிட்ட சொல்ல வர்றாங்க போல. அத்துடன் அந்த காட்சி அகல்கிறது.
பதினெட்டாம் நாள், காலை 8 மணி, ‘ஆலுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா, தெறிச்சு கலீச்சுன்னு கிராக்கிவுட்டா சாலுமா’ என்ற தல அஜித்தின் அதிரடியான பாடலுடனும், ஹவுஸ்மேட்டின் மரண குத்து நடனத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். ‘ஒன்னு மட்டும் ராஜூ கும்பல்கிட்ட இருக்குங்கிறது அவங்களுடைய எண்ணம். அத மொத்தமா எடுத்துடனும்ங்கிறது நெனைக்கிறது காவாலித்தனத்தின் உச்சகட்டம்னு சொல்லுவாங்களே அது மாறி தான். ஆக மொத்தத்துல நாளைக்குள்ள எல்லாத்தையும் சுருட்டிடுவாங்கன்னு நினைக்கிறேன்’ என்று அண்ணாச்சி ராஜுவிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் அபிஷேக் குழுவிற்கு இல்லத்தில் எல்லோரிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. என்ன பிரியங்கா? டாஸ்க் முடியும் போது எல்லாரும் நம்ம பவர பார்த்து,நம்ம கூட ஒன்னா வந்து சேரனும்னு சொன்னீங்களே. இங்க நடக்குறத பாத்தா நீங்க நினைக்கிறது நடக்காது போலயே. ’உன் காயின பத்திரமா வச்சிருக்கல்ல, யாராச்சு ஆச வார்த்த சொல்லி கேப்பாங்க, குடுத்திடாத’ என்று போற போக்கில் இசைக்கு ஒரு அட்வைஸ்சை விதைத்து விட்டு செல்கிறார் அண்ணாச்சி. அந்த நாணயத்தினால் என்ன பவர் கிடைக்க போகிறது என்ன நிகழ போகிறது என்று யாருக்கும் தெரியாது. எல்லோருடனும் இணைந்து எடுக்க முயற்சிப்பது என்பது போட்டி. யாவினையும் மொத்தமாய் அபகரிக்க நினைப்பது என்பது போட்டியல்ல அது ஒரு வித நியாயம் இல்லாத செயல். அதை தான் அபிஷேக் குழு செய்ய நினைக்கிறது, என்பதை அண்ணாச்சி தன் வார்த்தையில் விளக்குகிறார். ‘சிபி இங்க வாங்க’ என்று தனக்கே உரிய மெல்லிய குரலில் பவ்னி சிபியை அழைக்கிறார். ‘ஆத்தி இது சைலன்ட்டா கூப்டாலே, ஏதாச்சு பெருசா வைலன்டா இருக்குமே’ என்றதொரு பார்வையில் பம்மி பம்மி பவ்னியின் அருகில் பேச வருகிறார் சிபி.
’நாங்க(பவ்னி,சுருதி) சேர்ந்து ஒரு காயின எடுத்த போ, அத மத்தவங்களோட நீங்களும்(சிபி) சேர்ந்து தான காட்டிக் கொடுத்தீங்க. அதுனாலே தான சுருதி ஜெயிலுக்கு போனா, அப்படி இருக்க நீங்களாவே ஏன் ஒரு காயின எடுத்து அத இசைக்கிட்ட கொடுக்கனும்?. நாங்களும் தானே நாமினேசன்ல இருக்குறோம். அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரிலயா’ என்று பவ்னி குதர்க்கமாக சிபியிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். ‘நீங்க தானே முன்னாடியே சொன்னீங்க, எனக்கு காயினே தேவை இல்ல, இருந்தாலும் கிடைச்சா தாமரை அல்லது இசைய காப்பத்தலாம்னு, நினைக்கிறேன்னு, இப்ப இசைக்கு குடுத்ததுல உங்களுக்கு என்ன வருத்தம், இப்ப உங்களுக்கும் காயின் ஆசை வந்திருச்சான்னு’ என்று சிபி, எதிர் விவாதம் மட்டும் பவ்னிக்கு கொடுக்காமால், அடுத்து பேச முடியாத அளவிற்கு ஒரு செக்-கும் வைத்தார் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் அந்த காட்சி அகலுகிறது. எப்படியோ சீரியஸ்சா போய்கிட்டு இருக்குற ஹவுஸ்குள்ள அப்ப அப்ப ராஜூவும் அண்ணாச்சி கல கலப்ப விதைக்கிறாங்க, அது அவங்களுக்கும் சரி, நமக்கும் சரி கொஞம் ’ரிலாக்ஸ் ப்ளீஸ்’ங்கிற மாறி இருக்கு. ‘போக போக இது அண்ணாச்சி வெர்சஸ் பிரியங்கா மாறி மாறுதுடா, அண்ணாச்சி காமெடி பண்ற மாறி அவள டார்கெட் பண்ணிக்கிட்டே இருக்காரு, என்னிக்கு வெடிக்க போறான்னு தெரில’ என்று அபிஷேக் நிரூப்பிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். உள்ளத சொன்ன வெடிப்பாங்களா, அது சரி வெடிச்சா வெடிச்சிட்டு போறாங்க, நாங்களும் பிரியங்காவ ’ஆங்ரி பேர்டா’ பாத்ததே இல்ல. அதுனால பாத்தே ஆகனும். அத்தோட அந்த காட்சி முடியுது. இப்ப பிக்பாஸ்சோட டைம் போல அவரோட குரல் வருது, ‘யார் யார் நாணயத்த கைப்பற்றி வச்சு இருக்கீங்களோ, அத ஒவ்வொருத்தர போய் எடுத்துக்கிட்டு வந்து, லிவிங் ஏரியால, யார் என்ன நாணயம் வச்சுருக்கீங்க என்பதை தெரியப்படுத்துங்க’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறார் பிக்பாஸ்.
தாமரை தன்னிடம் ‘காற்று’ என்ற நாணயம் இருப்பதாக சொல்கிறார். வருண் தன்னிடம் ‘நீர்’ என்ற நாணயம் இருப்பதாக சொல்கிறார். நிரூப் தன்னிடம் ‘நிலம்’ என்ற நாணயம் இருப்பதாக சொல்கிறார். இசை தன்னிடம் ‘நெருப்பு’ என்ற நாணயம் இருப்பதாக சொல்கிறார். பவ்னி தன்னிடம் ‘ஆகாயம்’ என்ற நாணயம் இருப்பதாக சொல்கிறார். ’அடப்பாவிகளா, ஒரே ஒரு நாணயத்த கையில வச்சிக்கிட்டு தான் இவ்ளோ பில்டப்பு கொடுத்தீங்களாடா, இதுல புதுசு புதுசா டாக்டிக்ஸ்லா வேற கண்டுபிடிச்சீங்களேடா’ என்று தான் கேட்க தோன்றுகிறது அபிஷேக் குழுவிடம். கடைசியில் பிக்பாஸ் நாணயத்தை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறார். அடுத்து ஒரு ஓலை பிக்பாஸ்சிடம் இருந்து வருகிறது. லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க்கின் இரண்டாவது கட்டத்திற்கான அறிவிப்பு போல. நாணயம், மற்றும் அதற்கான ஆளுமைகளை பற்றி விவரிக்கிறார் சிபி. ‘அதாவது ‘நீர்’ நாணயத்தை கைப்பற்றிய வருணின் ஆளுமை பாத்ரூம் பரப்பை உள்ளடக்கும், ‘நிலம்’ என்ற நாணயத்தை கைப்பற்றிய நிரூப்பின் ஆளுமை பெட்ரூம் பரப்பினை உள்ளடக்கும், ‘நெருப்பு’ என்ற நாணயத்தை கைப்பற்றிய இசையின் ஆளுமை, சமையல் செய்யும் பரப்பினை உள்ளடக்கும், ‘காற்று’ என்ற நாணயத்தை கைப்பற்றிய தாமரையின் ஆளுமை கார்டன் பரப்பினை உள்ளடக்கும். ‘ஆகாயம்’ என்ற நாணயத்தை கைப்பற்றிய பவ்னியின் ஆளுமை டைனிங் மற்றும் பரந்து விரிந்த லிவிங் ஏரியா பரப்பினை உள்ளடக்கும். ஒரு இடத்தில் இருக்க நினைப்பவர்கள், அந்த இடத்தின் ஆளுமையை கொண்டவர்களிடம் முறையாக உரிமை கோர வேண்டும். அதாவது யாராவது லிவிங் ஏரியாவில் இருக்க விரும்பினால் முறையாக பவ்னியிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே அந்த அறிவிப்பின் உள் அர்த்தம். யார் யார் எந்த பரப்பினை வைத்து இருக்கிறார்களோ, அந்த பரப்பு மற்றும் அந்த பர்ப்பில் வசிக்க விரும்புவர்களுக்காக விதிமுறைகளை அவர்களே வகுக்க வேண்டும். உதாரணத்திற்கு தாமரைக்கு கார்டன் பரப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது அங்கு இருக்க நினைப்பவர்களுக்கான விதி முறைகளை, தாமரை வகுக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
இது போக ஐந்து பரப்பின் ஆளுமைகள் தங்களுடைய நாணயங்களை, அந்தந்த பரப்பில் இருக்கும் கண்ணாடி பெடஸ்டலில் வைத்து பாதுகாக்க வேண்டும். ’நாணயத்தின் சொந்தக்காரர்கள் தங்களுடைய பரப்பில் யாரேனும் நுழைவதற்கு அனுமதி கேட்டால், ஏதேனும் ஒப்பந்தம் அல்லது எதையாவது செய்ய சொல்லி வேலை வாங்கி விட்டு அனுமதி கொடுக்கலாம்’. இது போக ‘ஹவுஸ்மேட்ஸ் யாரும் நாணயத்தின் உரிமையாளர்களின் பரப்பில் நுழைந்து அந்த நாணயத்தை கைப்பற்றி கேமரா முன் பதிவு செய்து விட்டால், பதிவு செய்த ஹவுஸ்மேட்சின் கீழ் அந்த பரப்பின் ஆளுமை வந்து விடும். முந்தைய ஆளுமையின் பதவி பறி போகும்’ யப்பா எவ்ளோ பெரிய மாத்திரைங்கிற மாறி எவ்ளோ பெரிய அறிவிப்பு, இவை தான் லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க்கின் இரண்டாவது கட்டம். அது என்ன இரண்டாவது கட்டம்?, இல்லத்தின் அடுத்த படியான ‘கலவர கட்டம்னு’ சொல்லுங்க பிக்பாஸ். சரி நம்ம காட்சிக்கு வருவோம். நாணயத்தின் உரிமையாளர்கள் அவரவர் ஆளுமையின் கீழ் இருக்கும் பரப்பிற்கு சென்று அங்கு இருக்கும் கண்ணாடி பெடஸ்டலில் தங்களுடைய நாணயத்தை வைக்கின்றனர். ‘எனக்கு பாத்ரூம் ஏதும் வந்துச்சுன்னா நான் என்ன பண்ணட்டும்?’ என்று தாமரை கேள்வி கேட்கிறார். நல்ல கேள்வி தான் ஆனா அதுக்கு அறிக்கைல விடை இல்லையே. நீங்களா யோசிச்சிக்கோங்க. அதான் ஒப்பந்தம்னு ஒன்னு இருக்குல்ல. பஸ்சர் அடிக்கிறது. டாஸ்க் ஸ்டார்ட் ஆகிறது. முதலாவதாக இயாக்கி, நிரூப்பிடம் பெட்ரூமுக்குள் நுழைய அனுமதி கேட்கிறார். ‘ஒரு சப்பாத்தி பண்ணிட்டு வா’ என்று கூலாக சொல்கிறார் நிரூப். இது நல்ல ஐடியாவ இருக்கே ஹ்ம்கும். அவரு அவரோட இடத்துல நிக்கிறார் ஓகே. அபிஷேக்கும் நிக்கிறார் ஏன்?, எதாச்சு செக்யூரிட்டி வேல போட்டு கொடுத்திருப்பாரு போல நிரூப் ஒகே ஒகே. அவரு ஏரியாவுக்கு அவரு ரூல்ஸ் சொல்லுவாருன்னு பாத்தா, அபிஷேக் சொல்லிட்டு இருக்காரு. ஹவுஸ்ல இருக்குற எல்லாருக்கும் அவரே வாயா இருந்துகிட்டா மத்தவங்களாம் எப்புடி பேச முடியும்? ஒகே ஒகே விடுங்க. நாம வேற காட்சிக்கு போவோம்.
ஆரம்பித்து விட்டார். அபிஷேக் தனது டாக்டிஸ்சை ஆரம்பித்து விட்டார். அந்தந்த இடத்தின் ஆளுமைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இவர் போய் அவர்களிடம் வான்டடா சொல்லிக் கொண்டு இருக்கிறார். பேசாம ’ஐந்து இடத்தின் ஆளுமைகளை ஆளும் ஆளுமை அபிஷேக்னு’ அறிவிச்சிடலாமா? ‘எனக்கு நீயும் நானும் டாப் 5-ல இருக்கனும், உனக்கு எனக்கும் புரிதல் இருந்திச்சினா இந்த மொத்த வீட்டையும் நாம கன்ட்ரோல் பண்ணலாம். எக்காரணத்த கொண்டும் வருண இங்க அனுமதிக்காத, உனக்கு யார் யார் ஸ்ட்ராங்னு தோனுதோ அவங்களலாம் அனுமதிக்காத’ என்று வழக்கம் போல தனது ஆக்ரோஷமான டாக்டிஸ்களை பவ்னியிடம் அள்ளி தெளிக்கிறார் அபிஷேக். ’நான் சொன்னா எதும் செய்ய மாட்டுக்காங்களே. இப்புடி வந்து மாட்டிக்கிட்டனே’ என்று எதுவும் புரியாமல் ஒரு பக்கம் கார்டன் ஏரியாவின் ஆளுமையாக பரிதவிக்கிறார் தாமரை. அபிஷேக் ஒவ்வொரு ஆளுமையிடமும் தனித்தனியாக சென்று கொளுத்தி போட்டு கொண்டு இருக்கிறார். தாமரைக்கு ஒரு வழியாக பல்வேறு போட்டியாளர்களிடமும் இருந்து உதவி வருகிறது. முக்கியமாக அண்ணாச்சி,அபினய்,ராஜு, அவர்கள் நாணயத்தை எடுக்க விரும்பவில்லை ஆனாலும் அதை தாமரையின் சார்பில் காப்பாற்ற முயல்கிறார்கள். அப்போது தான் அண்ணாசி ஒரு நாடகத்தை இயற்றுகிறார், ‘ஏய் தாமரை, அபினய், நீங்க அப்புடியே கொஞ்ச தூரம் போய்ட்டு, அய்யயோன்னு கத்துங்க, எல்லாரும் வெளில வந்து பாப்பாங்க, நான் சொல்லிக்கிறேன் நான் காயின எடுத்து கேமராட்ட சொல்லிட்டு வச்சிட்டேன். இப்ப நான் தான் ஆளுமைன்னு, ஆனா தாமரையே நமக்குள்ள ஆளுமையா இருக்கட்டும், நான் ஆளுமைன்னு நடிச்சு ஒரு ஒரு மணி நேரம் நாணயத்த பாதுகாக்குறேன்னு’ அண்ணாச்சி சொல்லி அந்த நாடகத்த நடத்தியும் காட்டிடுறாரு. ஹெலோ அபிஷேக் நோட் பண்ணிக்கோங்க. டாக்டிக்ஸ்னா இது தான் டாக்டிக்ஸ்.
இதற்கிடையில் அபிஷேக், இசை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவரின் நாணயத்தை அபகரித்து ’பேசாம இரு’ என்று முனகிக் கொண்டு அவர்பாட்டுக்கு செல்கிறார். இசை அதிர்ச்சியில் உறைந்து நிற்கிரார். அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ’பிக்பாஸ் நான் இசையோட நாணயத்த்தை கைப்பற்றி விட்டேன்’ என்று கேமராவில் காண்பித்து பதிவு செய்து விட்டு சமையலறையின் ஆளுமையாகிறார் அபிஷேக். ஆக மொத்தம் டாக்டிக்ஸ் என்ற பெயரில் எல்லோரின் கேமையும் சேர்த்து அவரே ஆடிக் கொண்டு இருக்கிறார். எல்லாரையும் ஆட விடுங்க அபிஷேக், அவங்க அவங்க திறமைக்கு அவங்களே ஆடட்டுமே. அப்ப தான அவங்களோட தனித்துவம் என்னனு பார்வையாளர்களுக்கு தெரியும். ஏன் உங்கள தவிர எல்லாரையும் முட்டாள்னு நினைச்சிட்டு அவங்களோட மூளைல உங்களோட வார்த்தைகள திணிக்கிறீங்க அபிஷேக். ’உனக்காக தான் விளையாடுறேன். உனக்காக தான் இறங்குறேன்னு’ இது வரைக்கும் சின்ன பொண்ணு அக்கா, மது, தாமரை, இசைன்னு எல்லார்கிட்டையும் சொல்லிட்டீங்க, ’ஒரு வேள பவரே உங்களுக்கு கிடைச்சாலும், இதுல நீங்க யார காப்பாத்த முயல்வீங்க?’, என்று அபிஷேக்கின் ஒவ்வொரு முடிவுகளிலும், செயல்களிலும், ஆயிரம் கேள்விகளும் அடக்க முடியாத கோபங்களும் பார்வையாளர்களுக்குள் எழுகிறது. அதை வோட்டிங்கில் தான் மக்கள் காண்பிப்பார்கள் என்பதை அபிஷேக் புரிந்து கொண்டால் சரி. வீட்டில் வருணை தவிர நான்கு நாணயங்கள் இருக்கும் போது, அபிஷேக் வருணை மட்டுமே டார்கெட் செய்கிறார். காரணம் அவர் வருணை, மற்ற ஆளுமைகளை விட ஸ்ட்ராங் கன்டஸ்டன்ட் ஆக பார்க்கிறார்.
அபிஷேக்கை பொறுத்த வரை அவரே அவரை வலிமையாக பார்த்து விட்டு. இசை, சுருதி உள்ளிட்டவர்களை ’இந்த கேம்க்கு அவர்கள் லாய்க்கு இல்லை’ என்ற அளவிற்கு பார்க்கிறார். இதற்கிடையில் இசையும் சுருதியும் பேசி போராடி அபிஷேக்கிடம் நாணயத்தை பெற்றுக் கொண்டனர். இசை மீண்டும் கேமரா முன் நாணயம் தனக்கே சொந்தம் என அறிவித்து விட்டு சமையலறையின் ஆளுமை ஆகி விடுகிறார். அத்துடன் அந்த காட்சி அகல்கிறது. ஹவுஸ்சிற்குள் நாய் குரைக்கும் சத்தம். பார்த்தால் பிரியங்கா தூங்கி கொண்டு இருக்கிறார். அதாவது அவர்களின் ப்ளேன் என்னவென்றால் பகல் முழுக்க நாணயம் நிரூப்பின் பாதுகாப்பிலும், இரவு முழுக்க பிரியங்கா மற்றும் மதுவின் பாதுகாப்பிலும் நாண்யத்தை வைத்துக்கொள்ளவே பிரியங்காவையும், மதுவையும் தன் ஆளுமை பரப்பில் பகலில் தூங்க அனுமதித்து இருக்கிறார் நிரூப். இதற்கிடையில் அவர்களின் டாக்டிக்ஸ்க்கு ஆப்பு வைக்கிறார் பிக்பாஸ். ‘இந்த வீட்டில் தொடர்ந்து பல்வேறு விதிகள் மீறப்பட்டு வருகின்றன. பகலில் தூங்குவது, மைக்கை சரிவர மாட்டாதது, இருக்கும் பொருள்களை சேதப்படுத்துவது, இனிமேல் இது போல விதி மீறல்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை பாயும்’ என எச்சரித்து விடுகிறார் பிக்பாஸ். அதற்கு பின் அந்த காட்சி அகலுகிறது. பஸ்சர் சத்தம் ஒலிக்கிறது. பிக்பாஸ்சின் குரல் ஸ்பீக்கர்களில் வருகிறது. ’லக்ஸ்சுரி பட்ஜெட் டாஸ்க்கின் இரண்டாவது கட்டம் இத்துடன் முடிவடைந்தது. இனி இந்த நாணயங்கள் அவற்றோட உரிமையாளர்கள் கிட்ட தான் இருக்கும். இனி யாரும் அதை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. மூன்றாவது கட்டம் விரைவில் தொடங்கும். தயாராக இருங்கள்’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறார் பிக்பாஸ்.
இதற்கு பின் நிரூப், அபிஷேக் உரையாடல் துவங்கிறது. ‘நீ ஒன்னு இன்புளுயன்ஸ் மாதிரி ஒன்னு பண்ணுறல்ல, அது தான் உன் பேர நாமினேசன்ல வர வைக்குது’ என்று நிரூப், அபிஷேக்கிடம் அட்வைஸ்சாக சொல்கிறார். யாரு பெத்த புள்ளயோ நம்ம மனசுல உள்ளத அப்படியே சொல்லுது. ஆனா அபிஷேக் எங்க அத கேக்குறாரு, ’நான் அப்புடி இல்லடா, நான் உன்ன மாறியோ, பிரியங்கா மாறியோ இருக்க முடியாது, என்ன மாறி இருக்கேன் இப்ப கூட ஸ்ருதி, இசை, பவ்னியோட ட்ரஸ்ட்ட ஆன் பண்ணிட்டேன்’ என்று நிரூப்பிடம் எதிர் விவாதம் வைக்கிறார் அபிஷேக். நீங்க ட்ரஸ் ஆன் பண்ணீட்டிங்க, ஆனா அது அவங்களுக்கே தெரியாது அப்படித்தான அபிஷேக். கேமரா அட்டென்சன் இருந்தா மக்கள் ஆதரவு கிடைச்சிடும், இன்புளுயன்ஸ் பண்ண தெரிஞ்சா ஹவுஸ்மேட்ஸ் ஆதரவு கிடைச்சிடும்னு ஒரு வித குருட்டு நம்பிக்கைல தான் அபிஷேக் இன்னமும் இந்த வீட்ல சுத்திட்டு இருக்காரு போல. தப்ப யாராச்சு சுட்டி காட்டி சொன்னா திருத்திக்கனும். அப்படி இல்லாம தான் பண்றது தப்பே இல்லன்னு சொல்லுறதும், பண்றது தப்பு தான்னு தெரிஞ்சும் அத தான் பண்ணுவேன்னு நின்னா, டாப் 5-லலாம் வர முடியாது அபிஷேக். அத்துடன் அந்த காட்சியை விட்டு நாமே அகன்று விடுவோம். அடுத்த பிக்பாஸ் ஓலை வருகிறது . லக்ஸ்சுரி பட்ஜெட்டுக்கான மூன்றாவது டாஸ்க். ‘ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருவராக எந்திரித்து பஞ்ச பூதங்களில் ஒன்றை தனக்கென தெரிவு செய்து, அதற்கான அர்த்த காரணங்களை நிறையாக சொல்ல வேண்டும், பின்னர் அவரே ஹவுஸ்மேட்ஸ்சில் ஒருவரை பஞ்ச பூதங்களில் ஒன்றாக தெரிவு செய்து, அதற்கான அர்த்த காரணங்களை குறையாக சொல்ல வேண்டும் இதுவே டாஸ்க்’ கேம்ல சண்ட வரலன்னு கடைசியா டாஸ்க்னு ஒன்னு வச்சு அதுல கொளுத்தி போடுறாரு போல பிக்பாஸ்.
முதலாவதாக அபிஷேக் எந்திரிக்கிறார்.
அபிஷேக்: ’நான் எப்பவுமே என்ன ஆகாசமா தான் பாக்குறேன், என்ன உற்காகத்துக்கு அளவே இல்ல என்னோட தேடலும் அந்த அளவுக்கு பரந்து விரிந்து இருக்கும், நிரூப்ப நெருப்பா பாக்குறேன், சுட்டுகிட்டே இருப்பான் அவனோட குறை அன்பிரடிக்டபில்’
அண்ணாச்சி: ‘நான் எப்பவும் என்னை நெருப்பாக பாக்குறேன், என்ன ஒளிக்காகவோ, உணவுக்காகவோ பயன்படுத்திக்கலாம், தன்னை தானே எரிக்கவும் ஒரு சிலர் பயன்படுத்திக்கிறார்கள், அந்த நெருப்பாக நான் இருக்க விரும்பவில்லை, அபிஷேக்கை கொளுத்திப் போடும் நெருப்பாக பார்க்கிறேன்’
பவ்னி: ‘நான் என்ன நீரா பாக்குறேன், ஏன்னா நீர் மாறி எப்பவும் கிளியரா இருப்பேன்னு நினைக்கிறேன், என்ன ஆனாலும் என்ன தடை எனக்கு வந்தாலும் நீர் மாறி ஓடிக்கிட்டே இருப்பேன். காற்றா அக்ஷாராவா பாக்குறேன், காற்றே புயல் மாறி மாறினா அது எல்லாத்தையும் சேதப்படுத்தும், அது தான் அக்ஷாரா’
பிரியங்கா: ‘நான் என்ன நீரா பாக்குறேன், நீர் மாறி எப்பவும் அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருப்பேன், காற்று ராஜுவுக்கு கொடுக்குறேன் அவன் இருக்கான் எல்லா இடத்துலயும் இருக்கான் ஆன அவன பாக்க முடில புரிஞ்சிக்க முடில’
இயாக்கி: ‘என்ன நிலமாக பாக்குறேன், நிலம் தான் எப்போவுமே ஸ்டேபிலா இருக்கும். என்ன அசிங்கம் போட்டாலும் அது அத உரமா மாத்திக்கும் அது தான் நான். நெருப்பா இசையை பாக்குறேன், ஜெயிக்கனும்ங்கிற நெருப்பு அவகிட்ட இருக்கு, ஆனா அந்த நெருப்பு எந்த இடத்துல சுவாலையா எரியனும், எந்த இடத்துல தணிஞ்சு போகனும்னு அவளுக்கு தெரில’
சிபி: ‘என்ன நெருப்பா பாக்குறேன், என்ன தீண்டாத வரைக்கும் நான் சுட மாட்டேன். தீண்டினா சுடுவேன். குறையா சொல்லனும்னா ராஜுவ நிலமா பாக்குறேன் ரொம்ப பொறுமையா இருக்குறான் அவன்கிட்ட நான் கோபத்த பாக்கனும்’ என்று சொல்லி முடிக்கிறார் சிபி.
மதுமிதா: ‘நான் என்ன நீரா பாக்குறேன், சில்லா இருப்பேன் அப்புடியே போவேன், குறையா சொல்லனும்னா அபினய்ய நீரா பாக்குறேன், சில நேரத்துல உறைஞ்சிடுறாங்க, அத உடைச்சிட்டு நீரா வந்தா நல்லா இருக்கும்’ என்று சொல்லி முடிக்கிறார் மது.
வந்துட்டான்யா தலைவன் வந்துட்டான்யா!
ராஜு: ‘நான் என்ன எல்லாவுமா நினைக்கிறேன், இருந்தாலும் ரொம்ப ஒத்துப்போறதுன்னா காத்து, நண்பனா பழகுனா தென்றல், எதிரியா பழகுனா புயல், அதையும் தாண்டினா சூறாவளி, நான் இல்லாம உங்களால இருக்கவே முடியாது, என்ன பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க, குறைனா, நெருப்பா பிரியங்காவ சொல்லுறேன், அவ ஒரு பொறி மாறி ரொம்ப பரவிச்சுன்னா சுத்தி இருக்குற எல்லாத்தையும் எரிச்சிடும்’னு சொல்லி முடிக்கிறார் ராஜூ.
பஸ்சர் அடிக்குது. எல்லாரும் கலையுறாங்க, இதுவரைக்கும் சொன்னதுலயே, ராஜூ சொன்ன விதம் கொஞ்சம் அழகா இருந்தது. அனைவரும் ரசிக்கும் படியும் கல கலவென்றும் இருந்தது. சரி நாம வேற ஒரு காட்சிக்கு போவோம் ‘நீங்க மூடிட்டு உங்க வேலைய பாருங்க’ யாரும்மா அது சுருதியா, யார பாத்தும்மா சொன்ன, அபிஷேக்க பாத்து தானா, அப்ப கரெக்டாதான்மா சொல்லி இருக்க. இதுக்கப்புறம் ஆச்சு அபிஷேக் எதுலயும் தலையிடாம இருப்பாரான்னு பாப்போம். எபிசோடு முழுக்க அபிஷேக்காவே இருந்தா என்னங்க பண்றது. முன்னாடிலா இவங்கள காமிச்சா தான் எபிசோடு சூடு பிடிக்கும்ங்கிறதுக்காக. மூனு புரோமோலயும் அவங்க மூஞ்சயே போடுவாங்க, ஆனா எபிசோடு முழுக்க போடுறதெல்லாம் முடிலப்பா என்ற நிலையில் தான் இருக்கிறது. கன்டன்ட்டா பாத்தா அபிஷேக் வாழ்க வாழ்க ன்னு தான் சொல்லனும். ஏன்னா மீதி யாருமே நமக்கு அபிஷேக் தர்ற அளவுக்கு கன்டன்ட் கொடுக்குறதில்ல, சரி எபிசோடு முடிஞ்சதுக்கு பிறகும் ஏன் அபிஷேக்க பத்தி பேசிட்டு இருக்கோம். என்டு கார்டு போடுவோம்.
” ஹைலைட்ஸ்: டாக்டிக்ஸ் என்ற பெயரில் மற்றவர்களின் திறமையை மறைத்து, அவர்களுக்கு முன் திரையாக நின்று கேமை ஆடுகிறார் அபிஷேக். இன்று பலரும் அவரிடம் சொன்ன கருத்தும் அது தான். இனி வரும் எபிசோடுகளில் ஆவது தன்னை திருத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “