பிக்பாஸ் 5 தமிழ் | Day 19 | Review | ’அபிஷேக்கை காப்பாற்ற நினைக்கிறார்களா பவ்னி மற்றும் நிரூப்? ’
பிக்பாஸ் 5 தமிழின் பத்தொன்பதாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.
பிக்பாஸ் இல்லத்தின் விடியல் :
தளபதியின் அதிரடியான ‘வாத்தி ரெய்டு’ பாடலுடன் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். மதுமிதா, நிரூப்பிடம் போட்ட செல்ல சண்டை செம்ம கியூட். ‘ஏன் டா ஒரு மாறி இருக்க, எல்லாரும் உன்ன பத்தி சொல்ற பீலிங் எனக்கும் இருக்கு, அபிஷேக் கேம கொஞ்சம் டிபரன்டா விளையாடுறான் அப்புடின்னு எனக்கும் தோனுது, பட் அது தான நீ, கேம இன்ட்ரஸ்டிங்கா ஸ்பைசியா கொண்டு போறதே நீ தான்டா, சோ யாரு என்ன சொன்னாலும் நீ டவுன் ஆகாத, நீ இப்படியே நீயாவே இரு’ இதெல்லாம் பவ்னி அபிஷேக்கிடம் சொல்லும் வார்த்தைகள். இப்பதா அபிஷேக் கொஞ்சம் சாந்தமா இருக்குற மாறி இருக்கு. பவ்னியோட வார்த்தைகள் மறுபடியும் அபிஷேக்க ஏத்தி விடுற மாறி இருக்கு.
வந்திடுச்சு டாஸ்க் ஓலை:
சரி அடுத்த காட்சிக்கு போவோம். வந்திருச்சு ஓலை. அடுத்த டாஸ்க் ரெடி போல. டாஸ்க் நேம் ‘விளையாடு இல்ல வெளில ஓடு’, போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் எப்படி இருக்க கூடாது என்பதெற்கான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. நான் நானாக இருக்கிறேன் என்று சும்மா வெட்டி பேச்சு மட்டும் பேசிக் கொண்டு பொழுதை கழிக்கும் இருவர், தமிழ் நிகழ்ச்சி என்று தெரிந்தும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி பீட்டர் விடும் இரண்டு பேர், தூங்குற நேரத்தை எல்லாம் பேசி கழிச்சிட்டு, பகல் நேரத்தில் தூங்கி வழியும் இரண்டு தூங்கு மூஞ்சுகள், கொரோனோவுக்கு எவ்வளவு முக்கியமோ, பிக்பாஸ் வீட்டுக்கு மைக் முக்கியம், அதை அலட்சியப்படுத்தும் இரண்டு பேர், என ஒவ்வொரு பிரிவுக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே டாஸ்க்.
மைக் சரியாக போடாதவர்கள்:
சிபி– பிரியங்கா மற்றும் அபிஷேக், சுருதி– பிரியங்கா மற்றும் அபிஷேக், பவ்னி– பிரியங்கா மற்றும் அபிஷேக், சின்ன பொண்ணு– பிரியங்கா மற்றும் அபிஷேக், ராஜு– பிரியங்கா மற்றும் அபிஷேக் வருண்– பிரியங்கா மற்றும் அபிஷேக், அக்ஷாரா– பிரியங்கா மற்றும் அபிஷேக்
அதான் பெரும்பான்மை வந்துட்டே இனி எதுக்கு எண்ணிக்கிட்டு, இந்த தலைப்பிற்கு தகுதியானவர்கள், பிரியங்கா மற்றும் அபிஷேக்னு அறிவிச்சிடுவோம்.
பகலில் தூங்குபவர்கள்:
சுருதி– நிரூப்,பிரியங்கா , சிபி– நிரூப்,பிரியங்கா, பவ்னி– நிரூப், பிரியங்கா, அண்ணாச்சி– நிரூப்,பிரியங்கா, மதுமிதா– நிரூப்,பிரியங்கா, அபினய்– நிரூப்,பிரியங்கா, அக்ஷாரா– நிரூப்,பிரியங்கா, சின்ன பொண்ணு– நிரூப்,பிரியங்கா, அபிஷேக்- நிரூப்,பிரியங்கா இனி எதுக்கு அத உருட்டிகிட்டு, இந்த தலைப்பிற்கு தகுதியானவர்கள் நிரூப் மற்றும் பிரியங்கானு அறிவிச்சிடுவோம்.
’ஆனா ஒன்னுடா இந்த டீம் (நிரூப்,பிரியங்கா,அபிஷேக்) தான் ஊருல உள்ள எல்லாரையும் பிக்பாஸ் ரூல மீறுகிறார்கள்னு கைய காட்டி சொன்னிச்சு, ஆனா இந்த டீமே பிக்பாஸ் ரூல மீறிக்கிட்டு இருக்குன்னு இன்னிக்கு தான் தெரியுது.’
வீட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள்:
பெரும்பாலானவர்களிடம் இருந்து வந்த பதில்கள் அபினய் மற்றும் நிரூப், இவர்கள் தான் இந்த பிக்பாஸ் இல்லத்தின் இங்லீஸ் பீட்டர்கள் போல.
சுவாரஸ்யம் அற்றவர்கள்:
பெரும்பாலானாவர்களிடம் இருந்து வந்த பதில்கள் இயாக்கி மற்றும் சுருதியாக இருந்தது, அபிஷேக், இயாக்கி மற்றும் அண்ணாச்சியை குறிப்பிடுகிறார். காரணம் அண்ணாச்சியின் காமெடிக்கு அபிஷேக்குக்கு சிரிப்பு வரவில்லையாம். சிரிப்பு வரலன்னா ________________, (இந்த டேஸ்ல சுருதி நேத்து அபிஷேக்க பார்த்து சொன்ன டையலாக்க பில் பண்ணிக்கோங்க)
ராஜூவின் மிமிக்ரி:
சரி அடுத்த காட்சிக்கு வருவோம். ஒரு பக்கம் ’சோறு போடுங்கப்பா, சோறு போடுங்கப்பா’ என்று கூவல் செய்து கொண்டு இருக்கிறார் பிரியங்கா. இன்னொரு பக்கம் ராஜூ பல வித்தைகளை கையில் வைத்திருப்பார் போல. அவர் காட்டிய மிமிக்ரி வகை எல்லாம் ஹைய்யோ செம்ம செம்ம. பிரியங்காவைப் போல ஒருவரை கலாய்த்து சிரிப்ப வைப்பது வேறு, ஹியூமரில் சிரிக்க வைக்கப்பது வேறு, அண்ணாச்சி போல அனைவருக்கும் ஏற்ற காமெடி சொல்லி சிரிக்க வைப்பது வேறு, இந்த மூன்றையும் செய்கிறார் ராஜூ. அவரால் முடிந்த அளவுக்கு இல்லத்தை கல கலப்பாக கொண்டு செல்கிறார்.
ராஜூ ஹவுஸ்சே அதிரும் படி அனைவரையும் சிரிக்க வைக்கிறார், உள்ளே இருந்து அந்த சிரிப்பலையின் அதிர்வை உணருகிற அபிஷேக்குக்கு காண்டாகுது போல. திருந்திட்டீங்கோன்னு தப்பா நினைச்சிட்டோம் அபிஷேக். ராஜூ தொடர்ந்து தன்னுடைய மிமிக்ரிக்களை தொடர்கிறார். அண்ணாச்சி, தாமரை, சின்ன பொண்ணு, இசைவாணி, சிபி, அக்ஷாரா, இயாக்கி என யாவரும் அவரை சூழ்ந்து அமர்ந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். சரி விடுங்க அடுத்த காட்சிக்கு போவோம்.
பிரியங்காவின் பசி மயக்கம்:
இதுவரைக்கும் நடந்த பிக்பாஸ்லயே சாப்பாட்டுக்காக அழுத ஒரே ஆளு நம்ம பிரியங்கா தான். ’எனக்கு பசிக்குது எதாச்சு சாப்டனும்னு’ அழுதுட்டே சொல்றாங்க” அத கேக்குறப்போவே ஒரு மாறி தான் இருக்கு. முதல் முறையா பசிய உணருறப்போ அது ரொம்ப வலி கொடுக்கும். அந்த வலிய தான் இப்ப பிரியங்கா அனுபவிக்கிறாங்க. பாவமா தான் இருக்கு. இருந்தாலும் நம்மளால என்ன செய்ய முடியும்? அடுத்த காட்சிக்கு போக தானே முடியும்.
’விளையாடு இல்லன்னா தக்காளி வெளிய ஓடு’ டாஸ்க்கின் முடிவுகள்:
டாஸ்க்கின் முடிவுகளின்படி, பெயர் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் கழுத்தில் மாட்டும்படி ஒரு டேக் கொடுக்கப்படும். அதை அவர்கள் வாங்கி கழுத்தில் இட்டுக்கொள்ள வேண்டும்.
1) முதலாவதாக அபிஷேக் பெறும் டேக் ‘ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்’ மைக் சரியாக போடாததன் காரணத்திற்காக போல,
2) ‘பேசிக்கலி ஐ டோண்ட் நவ் தமிழ் யா’ என்ற டேக்கை பெறுகிறார் நம்ம பிக்பாஸ் இல்லத்தின் இங்கிலீஸ் புலவர் அபினய்.
3) ’நான் நானா தான் இருக்கேன், அதுனால தான் வெட்டியா சுத்திட்டு இருக்கேன்’ என்ற டேக்கை பெறுகின்றனர், இயாக்கியும் சுருதியும். இதுக்கு எதுக்குங்க கட்டிப்பிடிச்சு கூத்தடிக்கீங்க, அவரு (பிக்பாஸ்) உங்கள கலாய்க்கிறாருங்க.
4) ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்ற டேக்கை இணைந்து பெறுகின்றனர். நம்ம தூங்கு மூஞ்சு கோவாலுக்கள் பிரியங்காவும், நிரூப்பும்.
ஒரு வழியாக பிரியங்காவின் முகத்தில் சிரிப்பு வந்து விட்டது. பழைய சிரிப்பு, முதல் வாரத்தில் பார்த்த அந்த சிரிப்பு, பிரியங்காவிடம் மட்டும் அல்ல, ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேரின் முகத்திலும் முதல் வாரத்தில் பார்த்த அந்த சிரிப்பை இந்த எபிசோடில் பார்க்க முடிகிறது. கழுத்தில் போர்டை மாட்டிக் கொண்டு யாவரும் இல்லத்திற்குள் அவரவர் முகத்தைப்பார்த்து அவரவர்களே சிரித்துக் கொள்கின்றனர். ‘எனக்கு ஏதாச்சு பவர்புல்லா டையலாக் ஏதாச்சு கொடுத்திருக்கலாம்ல, டேய் பெரியப்பா (பிக்பாஸ்) உனக்கு வைக்கிறன்டா பெரிய ஆப்பா’ என்று பிக்பாஸ்சிடமே சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார் அபிஷேக். சரி இத விடுவோம் அடுத்த காட்சிக்கு போவோம்
பிரியங்காவின் அவமானம்:
பிரியங்கா: ‘என்ன வர்ணிச்சு ஒரு நாலு லைன் பாசமாக சொல்லுங்க ராஜூ’
ராஜூ: அதாவது ‘இந்தியால இருக்குற அதிசயம் தாஜ்மஹால்னு சொல்லுவாங்க மேடம்,,எனக்கு நம்பிக்கை கிடையாது’
பிரியங்கா: எனக்கு இப்புடிலாம் வேணாம், உண்மையா வேணும்.
ராஜூ: உண்மையானா உங்கள வர்ணிக்கவே முடியாது மேடம்
பிரியங்கா:
தாமரை வெர்சஸ் பிரியங்கா:
சில பேர் சண்ட போட்டாலும் சரி, திட்டினாலும் சரி கோபமே வராது, மாறாக சிரிப்பு தான் வரும். அந்த கேட்டகரில தான் தாமரை இருக்காங்க, பிரியங்கா கூட திட்டிக்கிட்டே அவங்க போட்ட சண்டை கியூட். ’எல்லாம் உன்னால தான்’ என்று பிரியங்கா எதார்த்தமாக சொல்ல, ’கொய்யால நான் ஒருத்தி ஓட்டு போட்டு நீ இப்புடி ஆகிட்டியாக்கும், ஒழுங்கா நைட் ஆனா தூங்கனும், நான் பாத்தேன் உன்ன தூங்க சொன்னா,நைட் புல்லா முழிச்சிட்டு பேசிட்டு பிச்சி புடுவேன் பிச்சு’ என்று வெள்ளந்தியா சிரித்துக் கொண்டே பிரியங்காவை திட்டுகிறார் தாமரை.
BREAK THE RULES:
அபிஷேக், நிரூப், பிரியங்கா, இயாக்கி, மதுவின் ‘இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்’ என்ற கோரஸ் பாடல் செம்ம. மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது, இது மாறி ரசிக்கும்படி எதாச்சு செய்யுங்கடா அப்புரன்டிஸ்களா, டாக்டிக்ஸ் அது இதுன்னு போட்டு எதுக்கு உருட்டிகிட்டு, உங்கள நீங்கள குழப்பிக்கிட்டு இருக்கீங்க. சரி அடுத்த காட்சிக்கு போவோம். ஒரு சைடு பவ்னியும் தன்னோட நாணயத்த வச்சு அபிஷேக்க காப்பாத்தனும்னு நினைக்கிறாங்க. இன்னொரு பக்கம் நிரூப்பும் தன்னோட நாணயத்த வச்சு அபிஷேக்க காப்பாத்தனும்னு நினைக்கிறாரு போல. ஆக மொத்தம் இந்த வாரமும் அபிஷேக் காப்பாற்றப்பட போறாரு. இத யூஸ் பண்ணிக்கிட்டு நல்லபடியா இனியாவது நல்லா விளையாடுவாறான்னு பாப்போம்.
ஹரீஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் என்ட்ரி:
பிக்பாஸ் பிளாஸ்மா வழியாக ஹரீஷ்சும் பிரியா பவானி சங்கரும் என்ட்ரி கொடுக்கின்றனர். ஓ மணப்பெண்ணே படத்துக்கான புரோமோசன் போல. ட்ரெயிலரையும் போட்டு விடுகின்றனர். அது மட்டுமா ஒரு டாஸ்க் வேறு கொடுக்கின்றனர், அதாவது ‘அக்ஷாராவும், நிரூப்பும் ஐந்து நிமிடத்திற்குள் ஒரு ஆம்லேட் போட்டு தனக்கு இல்லத்திற்குள் பிடித்தவருக்கு கொடுக்க வேண்டும்’ ஈசியாக இருக்கிறதுன்னு ரெண்டு பேரும் சமையல்கட்டுக்கு ஓடுறாங்க. நிரூப் தான் செஞ்ச ஆம்லேட்ட அண்ணாச்சிக்கு கொடுக்குறாரு. அக்ஷாரா நம்ம ராஜூ பாய்க்கு கொடுக்குறாங்க. அங்க ஒரு பக்கம் காண்டு கண்ணம்மாவாக நிரூப்பை முறைத்துக் கொண்டு இருக்கிறார் பிரியங்கா. தனக்கு ஆம்லேட் கொடுக்கவில்லை என்னும் கோபம் போல.
ஆம்லேட் சண்டை:
அவங்க உனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு தானடா குடுக்க சொன்னாங்க, நீ என் அண்ணாச்சிக்கு கொடுத்த, எனக்கு ஏன் கொடுக்கலன்னு நிரூப் கிட்ட செல்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க பிரியங்கா. பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கு. ஹ்ம்கும் நமக்கு ஒரு பெஸ்ட்டி இப்படி இல்லயேன்னு பீல் பண்ண வைக்கிறாய்ங்கப்பா!
பிக்பாஸ் அறிவிப்பு:
டாஸ்க்கில் அனைவரும் சிறப்பாக விளையாண்டீர்கள். நாணயத்தை கைப்பற்றிய வருண்,தாமரை,நிரூப்,இசை,பவ்னி அவர்களுக்கான சலுகைகளை அறிவிக்கிறார் பிக்பாஸ்.
1) நாணயத்தை வைத்திருப்பவர்கள் தன்னையோ, தனக்கு விருப்பமானவர்களையோ எலிமினேசனில் இருந்து காக்கலாம்.
2) தலைவர் பதவியை பறித்து தன் வசம் அல்லது தனக்கு பிடித்தவர்களின் வசம் கொடுக்கலாம்.
3) மேலிருக்கும் இரண்டு சலுகைகளையும் இந்த பிக்பாஸ்சின் பத்தாம் வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருமுறை தான் பயன்படுத்த முடியும்.
4) இன்றிலிருந்து ஐந்து வாரத்திற்கு ஒவ்வொரு ஆற்றலின் நாணயத்தை வைத்திருப்பவர்களுக்கும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு ஆளுமை வீட்டில் கொடுக்கப்படும்.
5) நாணயம் இடையில் கை மாறினால் சலுகைகளும் கை மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு
என்று தன் அறிவிப்பை முடிக்கிறார் பிக்பாஸ்
” ஆரம்பத்திலிருந்து கலகலப்பாக சென்று கொண்டிருந்த இந்த எபிசோடு, கடைசியில் மீண்டும் டாக்டிக்ஸ், புறம் பேசல் என்று தனது வழிக்கு மீண்டும் சென்றது. பிரியங்கா பிரியங்காவாகவே இருந்தாலே அது எல்லோருக்கும் பிடிக்கும். அவர் அதில் இருந்து அவ்வப்போது விலகி கேம் மூட்க்கு போய் விடுகிறார். அது ஒன்று தான் அவர் இந்த இல்லத்தில் செய்யும் மிகப்பெரிய தவறு. சரி விடுங்க. நாமளும் கிளம்புவோம். நாளைக்கான எபிசோடில் மீண்டும் சந்திப்போம் ”
’ஒட்டு மொத்தமாக இன்றைய இல்லத்தின் இயல்புக்கான REVIEW’